திருச்சி விமான நிலையத்தில் வேலையின்றி தவிக்கும் தொழிலாளர்கள்

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் தேவைகளுக்காக டிராலிகளை பயன்படுத்த சுமார் 50 ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தனர்.

Update: 2020-05-13 03:20 GMT
செம்பட்டு, 

திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் தேவைகளுக்காக டிராலிகளை பயன்படுத்த சுமார் 50 ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டு பணியாற்றி வந்தனர். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால் ஒப்பந்த ஊழியர்கள் வேலையின்றி தவித்து வருகிறார்கள். பயணிகள் வருகை இல்லாததால் டிராலிகளும் விமான நிலைய வளாகத்தில் பயன்பாடின்றி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்