பாலக்கோடு பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை

பாலக்கோடு பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா பரிசோதனை.;

Update:2020-05-13 08:26 IST
பாலக்கோடு,

பாலக்கோடு பேரூராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா? என பரிசோதனை முகாம் நடத்தப்பட்டது. பரிசோதனை முகாமை பேரூராட்சி செயல் அலுவலர் டார்த்தி தொடங்கி வைத்தார். இதில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சரஸ்குமார் தலைமையிலான மருத்துவ குழுவினர், தூய்மை பணியாளர்கள், ஊழியர்களுக்கு பரிசோதனை செய்தனர். பரிசோதனை முடிவில் யாருக்கும் நோய் தொற்று இல்லை என தெரியவந்தது. இதில் டாக்டர் செந்தில், சுகாதார மேற்பார்வையாளர்கள் சிவக்குமார், நாகராஜ் மற்றும் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்