மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு ரூ.25 லட்சத்தில் மருத்துவ உபகரணங்கள் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்

பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.;

Update: 2020-05-13 00:01 GMT
மன்னார்குடி,

சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.25 லட்சம் மதிப்பிலான வெண்டிலேட்டர், மொபைல் ஸ்கேனர், மல்டி பேராமீட்டர், மொபைல் எக்ஸ்ரே கருவி, பாதுகாப்பு கவச உடை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. 

இதில் மன்னார்குடி டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு மருத்துவ உபகரணங்களை வழங்கினார். இதில் மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் விஜயகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் டி.ஆர்.பி. ராஜா எம்.எல்.ஏ. நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது:-

கொரோனாவை ஒழிப்பதில் மத்திய, மாநில அரசுகள் மக்களை கைவிட்டு விட்டது. இதனால் மக்களுக்கு தேவையான மருத்துவ கருவிகளை மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு வழங்கியுள்ளேன் என்றார்.

மேலும் செய்திகள்