கொரோனா சமூக பரவலாக மாறாமல் இருக்க தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்

கொரோனா சமூக பரவலாக மாறாமல் இருக்க வேண்டுமானால் தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு அலுவலர் சண்முகம் அறிவுறுத்தினார்.

Update: 2020-05-12 23:43 GMT
திருவாரூர், 

கொரோனா சமூக பரவலாக மாறாமல் இருக்க வேண்டுமானால் தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு அலுவலர் சண்முகம் அறிவுறுத்தினார்.

ஆய்வு கூட்டம்

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்்த் முன்னிலை வகித்தார். கொரோனா தடுப்பு கண்காணிப்பு குழு அலுவலரும், அரசு அருங்காட்சியக ஆணையருமான சண்முகம் தலைமை தாங்கினார். அப்போது அவர் கூறியதாவது:-

மக்களின் அத்தியாவசிய தேவைகளை கருத்தில் கொண்டு ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. கொரோனா சமூக பரவலாக மாறாமல் இருக்க வேண்டுமானால் பொதுமக்கள் தேவையின்றி வீட்டைவிட்டு வெளியே வருவதை தவிர்க்க வேண்டும்.

முக கவசம்

அத்தியாவசிய பொருட்கள் வாங்க கடைகளுக்கு வரும் போது கட்டாயம் முக கவசம் அணிந்து வர வேண்டும். அனைத்து கடைகள், பெட்ரோல் நிலையங்கள், உணவகங்கள் உள்ளிட்டவைகளில் பணிபுரியும் பணியாளர்கள் கட்டாயம் முக கவசம், கையுறை போன்றவைகளை அணிந்து பணியாற்ற வேண்டும். அவ்வாறு முக கவசம், கையுறையை ஊழியர்கள் அணியாமல் பணிபுரிந்தால் கடை உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர் சுகாதாரத்துறை இணை இயக்குனர் ராஜமூர்த்தி, துணை இயக்குனர் விஜயகுமார், உதவி கலெக்டர்கள் ஜெயபிரீத்தா, புண்ணியக்கோட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்