சொந்த மாநிலம் திரும்பிய 27,865 தொழிலாளர்களின் செலவை காங்கிரஸ் ஏற்றது - பாலசாகேப் தோரட் தகவல்

சொந்த மாநிலம் திரும்பிய 27,865 தொழிலாளர்களின் செலவை காங்கிரஸ் ஏற்றது என்று மாநில தலைவர் பாலசாகேப் தோரட் கூறியுள்ளார்.

Update: 2020-05-12 23:21 GMT
மும்பை, 

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கான செலவை மாநில காங்கிரஸ் ஏற்கும் என அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடந்த வாரம் அறிவித்தார். 

இந்தநிலையில் மராட்டிய காங்கிரஸ் 27 ஆயிரத்து 865 தொழிலாளர்களின் பயண செலவை ஏற்று உள்ளதாக மாநில தலைவா் பாலசாகேப் தோரட் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப வசதியாக நாக்பூரில் இருந்து முசாபர்பூர், லக்னோ, பால்லிலா, தர்பங்கா மற்றும் வார்தா - பாட்னா, புனே- லக்னோ, போபால், மிரஜ்- கோராக்பூர், சந்திராப்பூர்- பாட்னா, அகமதுநகர்- உன்னாவ் சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட்டன. இதில் சென்ற பலரது பயணிகளின் செலவை காங்கிரஸ் ஏற்றது.

இதுதவிர மும்பையில் இருந்து ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார் சென்ற தொழிலாளர்களின் பயண செலவையும் காங்கிரஸ் ஏற்றுள்ளது.

மேலும் 24 ஆயிரம் பேர்

இதேபோல சொந்த ஊர் திரும்பிய தொழிலாளர்களுக்கு காங்கிரஸ் சார்பில் உணவு, முககவசம், சானிடைசர் ஆகியவை வழங்கப்பட்டன. இதுதவிர பீகார், மத்திய பிரதேசம், ஒடிசா, ராஜஸ்தான், மேற்குவங்கம், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த 24 ஆயிரம் தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பும் நடவடிக்கையிலும் காங்கிரஸ் ஈடுபட்டு வருகிறது.

உத்தரபிரதேசத்தை சேர்ந்த 18 ஆயிரம் தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப உதவி கேட்டு மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகளிடம் பெயர் பதிவு செய்து உள்ளனர்’’ என்றார்.

மேலும் செய்திகள்