கூட்டுறவு சங்கங்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதி முதல்-அமைச்சரிடம் வழங்கப்பட்டது
கூட்டுறவு சங்கங்கள் சார்பில் கொரோனா நிவாரண நிதி முதல்-அமைச்சரிடம் வழங்கப்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரி பொது ஊழியர்கள் கடன் சங்கம் சேம நல நிதியில் இருந்து ரூ.5 லட்சம் மற்றும் ஊழியர்களின் ஒரு நாள் ஊதியம் என மொத்தம் ரூ.5 லட்சத்து 27 ஆயிரத்தை கொரோனா நிவாரண நிதியாக அமைச்சர் கந்தசாமி தலைமையில் முதல்-அமைச்சர் நாராயணசாமியிடம் சங்க தலைவர் தமிழ் ஒளி, செயலாளர் கோவிந்த நாயுடு மற்றும் இயக்குனர்கள் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியின்போது வைத்திலிங்கம் எம்.பி., கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுமிதா ஆகியோர் உடனிருந்தனர்.
இதேபோல் கூட்டுறவு கட்டிட மையம் சார்பில் அதன் நிர்வாகி இரிசப்பன் ரூ.1 லட்சமும், கரிக்கலாம்பாக்கம் குமரேஸ்வரன் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் அதன் நிர்வாகி ரூ.59,100-ம் முதல்-அமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.
புதுச்சேரி மாநில கூட்டுறவு வங்கி சார்பில் ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் ரூ.2 லட்சத்து 90 ஆயிரத்தை கூட்டுறவு வங்கி நிர்வாகி வல்லவன், மேலாண் இயக்குனர் கருணாகரன் ஆகியோர் முதல்-அமைச்சரிடம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் பொதுமேலாளர் செந்தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.