கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் ரத்து

கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-12 05:17 GMT
ஆலங்குடி, 

கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

முத்துமாரியம்மன் கோவில்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி முத்துமாரியம்மன் கோவில் 100 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஆலங்குடி நாட்டை சேர்ந்த 12 கிராமத்தார்களும் ஒன்று கூடி சித்திரை மாதத்தில் பூச்சொரிதல், காப்புக் கட்டுதல், பொங்கல், தேரோட்டம் என தொடர்ந்து திருவிழா வெகு சிறப்பாக நடக்கும். காப்பு கட்டியதிலிருந்து தினந்தோறும் பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். இக்கோவிலில் சித்திரை தேரோட்டம் காண புதுக்கோட்டை மாவட்டம், மட்டுமல்லாது பிற மாவட்டங்களிலிருந்தும் திரளான பக்தர்கள் வருவார்கள்.

தேரோட்டம் ரத்து

தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் முத்துமாரியம்மன் கோவில் மூடப்பட்டுள்ளது. இதனால் சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்படுவதாக கோவில் நிர்வாகிகள் தெரிவித்தனர். மேலும் அரசு அறிவித்த விதிமுறைகளை கடைப்பிடிக்க தயாராக இருப்பதாகவும், கோவிலை திறந்து வழிபாடு செய்ய அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்