வெளி மாநிலங்களில் இருந்து புதுக்கோட்டை வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்

வெளிமாநிலங்களில் இருந்து புதுக்கோட்டை வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

Update: 2020-05-11 04:13 GMT
புதுக்கோட்டை, 

வெளிமாநிலங்களில் இருந்து புதுக்கோட்டை வந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.

முகாம்களில் தங்க வைப்பு

கொரோனாவால் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் புதுக்கோட்டையை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களது ஊருக்கு திரும்பி வருகின்றனர். அவர்கள் தனித்தனி முகாம்களில் தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். இந்த நிலையில் குஜராத் மாநிலத்தில் இருந்து வந்த 9 பேர் புதுக்கோட்டை மகளிர் கல்லூரி விடுதியில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் தொற்று உறுதியாகவில்லை. இருப்பினும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல மராட்டியத்தில் இருந்து ரெயில் மூலம் நேற்று திருச்சி வந்து பின்னர் புதுக்கோட்டை அருகே குளத்தூருக்கு வந்த 24 தொழிலாளர்கள், மாத்தூர் அரசு மாதிரி பள்ளியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தனிமைப்படுத்தப்பட்டனர்

இதேபோல கேரளா, மராட்டிய மாநிலங்களில் இருந்து விராலிமலை, குளத்தூருக்கு வந்த 31 பேரும், கர்நாடகாவில் இருந்து புதுக்கோட்டைக்கு வந்த 4 பேரும் மச்சுவாடியில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்