தாரமங்கலத்தில், தி.மு.க. சார்பில் அகதிகள் முகாமில் நிவாரண பொருட்கள்
தாரமங்கலத்தில், தி.மு.க. சார்பில் அகதிகள் முகாமில் நிவாரண பொருட்கள்.
தாரமங்கலம்,
தாரமங்கலம் அருகே பவளத்தானூர், குருக்கப்பட்டி, அத்திக்கட்டானூர் ஆகிய இடங்களில் உள்ள இலங்கை அகதிகள் முகாமிற்கு நிவாரண பொருட்கள் வழங்கும் விழா மேற்கு ஒன்றிய மற்றும் பேரூர் தி.மு.க. சார்பில் தாரமங்கலத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு தலைமை செயற்குழு உறுப்பினர் அம்மாசி தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவிக்குமார், பேரூர் செயலாளர் குணசேகரன், மாவட்ட பொருளாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் டி.எம்.செல்வகணபதி கலந்து கொண்டு பவளத்தானூர் அகதிகள் முகாமை சேர்ந்த 355 பேருக்கும், குருக்கப்பட்டி முகாமை சேர்ந்த 257 பேருக்கும், அத்திக்கட்டானூர் முகாமை சேர்ந்த 58 பேருக்கும் அரிசி, பருப்பு, எண்ணெய், மளிகை பொருட்களை வழங்கினார். இதில் குருக்கப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் மணிமேகலை வெங்கடாசலம், கிருஷ்ணன், ஊராட்சி செயலாளர் சுந்தரம், மணி, கந்தசாமி, தமிழரசு, தாசப்பன், ராஜேந்திரன், சதீஷ்குமார், கவுன்சிலர் பிரபாகரன், தங்கராஜ், முனியப்பன், குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.