திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர்
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
திருச்சி,
திருச்சி அரசு மருத்துவமனையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 7 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
கொரோனா வைரஸ்
திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 65 பேரும், அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 16 பேரும், பெரம்பலூரை சேர்ந்த 31 பேரும், ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும், கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஒருவரும், புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 3 பேரும் என 117 பேர் கொரோனா வைரஸ் பாதிப்புடன் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நேற்று அரியலூரை சேர்ந்த 6 பேரும், பெரம்பலூரை சேர்ந்த ஒருவரும் என 7 பேர் பூரண குணம் அடைந்து மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீடு திரும்பினர்.
திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 51 பேரும், அரியலூரை சேர்ந்த 11 பேரும், பெரம்பலூரை சேர்ந்த 7 பேரும், ஈரோட்டை சேர்ந்த ஒருவரும், கரூரை சேர்ந்த ஒருவரும், புதுக்கோட்டையை சேர்ந்த ஒருவரும் என ஆக மொத்தம் 72 பேர் இதுவரை பூரண குணம் அடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டத்தை சேர்ந்த 13 பேர், பெரம்பலூரை சேர்ந்த 24 பேர், அரியலூரை சேர்ந்த 5 பேர், புதுக்கோட்டையை சேர்ந்த 2 பேர் என 44 பேர் அரசு மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
14 நாட்கள் தனிமை
வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பிறமாவட்டங்களில் இருந்து திருச்சி மாவட்டத்துக்குள் வரும் நபர்கள் உடனடியாக சுகாதாரத்துறையினரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிப்பதுடன் 14 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வராமல் தனித்திருக்குமாறு அறிவுறுத்தப் படுகிறது. தேவையில்லாமல் வெளியில் நடமாடுவதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும். திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய் இல்லாத மாவட்டமாக மாற்றுவதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.
மேற்கண்ட தகவலை திருச்சி மாவட்ட கலெக்டர் எஸ்.சிவராசு தெரிவித்துள்ளார்.