குடியாத்தம் அருகே தண்ணீர்தேடி வந்த புள்ளிமான் மீட்பு
குடியாத்தம் அருகே தண்ணீர்தேடி வந்த புள்ளிமானை வனத்துறையினர் மீட்டனர்.
குடியாத்தம்,
குடியாத்தம் வனப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. கோடை காலத்தில் தண்ணீர் தேடி அடிக்கடி மான்கள் கிராமங்களுக்குள் வருவது வாடிக்கையாக உள்ளது. இந்த நிலையில் குடியாத்தத்தை அடுத்த காத்தாடி குப்பம் கிராமத்தில் உள்ள ஓய்வு பெற்ற போலீஸ் ஏட்டு சிட்டிபாபு என்பவரின் விவசாய நிலத்துக்கு புள்ளிமான் ஒன்று நேற்று அதிகாலையில் வந்துள்ளது.
இந்த மானை நாய்கள் விரட்டி உள்ளது. இதைபார்த்த பொதுமக்கள் பத்திரமாக மீட்டு கட்டி வைத்தனர். பின்னர் இதுகுறித்து குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். வனவர் பிரகாஷ், வனக்காப்பாளர் சுகந்தன் உள்ளிட்ட வனத்துறையினர் விரைந்து சென்று புள்ளி மானை மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் தீர்த்தமலை காப்புக் காட்டில் விட்டனர்.