விருத்தாசலம் வாலிபருக்கு கொரோனா உறுதி 759 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது
விருத்தாசலம் வாலிபருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 395 ஆக உயர்ந்துள்ளதுடன், 759 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியுள்ளது.;
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 394 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்தவர்களால் அதிகமாக பரவியது. இருப்பினும் மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கொரோனா பாதித்த நபரின் தொடர்பில் இருந்த விருத்தாசலத்தை சேர்ந்த 32 வயது வாலிபருக்கு நேற்று கொரோனா உறுதியாகி உள்ளது. இதையடுத்து அவர் உடனடியாக சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதன் மூலம் நேற்று மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 395-ஆக உயர்ந்துள்ளது.
தனி வார்டில் 269 பேர்
இது தவிர கடலூர் அரசு மருத்துவமனையில் 86 பேர், விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் 63 பேர், சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 71 பேர், சிதம்பரம் அரசு மருத்துவமனையில் 31 பேர், திட்டக்குடி அரசு மருத்துவமனையில் 18 பேர் என மொத்தம் 269 பேர் தனி வார்டுகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதித்தவர்களின் தொடர்பில் உள்ள 2 ஆயிரத்து 981 பேர் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். மாவட்டத்தில் இது வரை 7 ஆயிரத்து 272 பேருக்கு பரிசோதனை செய்ததில், 395 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 6 ஆயிரத்து 306 பேருக்கு பாதிப்பு இல்லை. 571 பேருக்கு முடிவுகள் வரவில்லை.
இது தவிர நேற்று 188 பேரின் உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 759 பேரின் பரிசோதனை முடிவுகள் வர வேண்டும் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.