இந்தியாவில் 5 லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்

இந்தியாவில் 5 லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலைவாய்ப்பு உள்ளதாக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-05-10 23:30 GMT
கடத்தூர், 

கோபியில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

சி.ஏ. எனப்படும் பட்டய கணக்காளர் தேர்வுக்காக 75 ஆயிரம் மாணவர்களுக்கு நேற்று காணொலி காட்சி மூலம் பயிற்சியை தொடங்கி வைத்துள்ளேன். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பட்டய கணக்காளர்களை வைத்து மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. நம்நாட்டில் உள்ள 138 கோடி மக்கள் தொகையில் 3 லட்சம் பேர்தான் ஆடிட்டர்களாக உள்ளனர். இன்னும் கூடுதலாக 5 லட்சம் ஆடிட்டர்களுக்கு வேலை வாய்ப்பு உள்ளது. 10-ம் வகுப்பு தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் உயர் கல்விக்கு செல்ல முடியும். அதனால்தான் பொதுத்தேர்வு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்