தினத்தந்தி செய்தி எதிரொலி: மண்பாண்ட தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி

அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த சோழமாதேவி கிராமத்தில் மண்பாண்ட தொழில் செய்து வரும் 40 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள்.

Update: 2020-05-10 06:45 GMT
தா.பழூர், 

அரியலூர் மாவட்டம் தா.பழூரை அடுத்த சோழமாதேவி கிராமத்தில் மண்பாண்ட தொழில் செய்து வரும் 40 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இவர்கள் மண் பானை, சட்டி, அடுப்பு மற்றும் அகல் விளக்குகள் போன்ற மண்பாண்டங்களை உற்பத்தி செய்து மொத்தமாகவும், சில்லரையாகவும் விற்பனை செய்து, அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை கொண்டு வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு வேறு தொழில் தெரியாததால் உபரி வருமானத்துக்கு வழி இல்லாமல் உள்ளனர்.

இந்நிலையில் கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் சந்தைகள் போன்றவை செயல் படாததால், மொத்த விற்பனை தடைபட்டது. மேலும் மண்பாண்ட தொழிலாளர் களுக்கு ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் வழங்கப்படும் மழைக்கால நிவாரண தொகையான ரூ.5 ஆயிரம், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் இறுதி வரை வழங்கப் படவில்லை.

இதனால் மண்பாண்ட தொழிலாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து தினத்தந்தியில் செய்தி வெளி யிடப்பட்டது. இதையடுத்து அதிகாரிகள் உடனடியாக மண்பாண்ட தொழிலாளர் களை தொடர்பு கொண்டு நிவாரண உதவிகள் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதைத்தொடர்ந்து நேற்று மண்பாண்ட தொழிலாளர் களுக்கான மழைக்கால நிவாரண நிதி ரூ.5 ஆயிரம் மற்றும் கொரோனா காலத்திற் கான நலவாரிய உறுப்பினர் களுக்கான நிவாரண நிதியாக ஆயிரம் ரூபாய் ஆகியவை அவர்களது வங்கி கணக்கில் அரசு சார்பில் செலுத்தப் பட்டது. 

இதுகுறித்த குறுந்தகவல் அவர்களது செல்போனுக்கு வந்தது. இதனால் மகிழ்ச்சி யடைந்த அவர்கள், கடுமை யான வறுமை நிலையில் இருந்த தங்களுக்கு நிவாரண உதவி வழங்க உத்தரவிட்ட கலெக்டர் ரத்னாவிற்கும், நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுத்த அதிகாரி களுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் நன்றி தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்