கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு குறித்து ஆய்வு
கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
வெள்ளியணை,
கரூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றிய அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒன்றிய பால்வளத்தலைவர் எம்.எஸ்.மணி தலைமையில், பொது மேலாளர் ஈஸ்வர் எஸ்ஜன்மதி, உதவி பொது மேலாளர் துரையரசன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
இந்த ஆய்வில் ஒன்றிய அலுவலக வளாகம் முழுவதும் தினந்தோறும் தூய்மைபடுத்தப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்படுவதும், அலுவலகத்தில் பணிபுரியும் பணியாளர்கள் அனைவரும் முக கவசம், கையுறை அணிந்து பணி செய்யவும் உறுதி செய்யப்பட்டது. இதை தவறாது பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.
மேலும் கொரோனா பரவும் முறைகள் குறித்தும், அதை தடுத்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் குறித்தும் விரிவாக எடுத்துக்கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து, கிருமிநாசினி, முக கவசம், கையுறைகள், சோப்புகள் உள்பட கொரோனா தடுப்பு உபகரணங்களை பணியாளர்களுக்கு பால்வளத்தலைவர் எம்.எஸ். மணி வழங்கினார்.