திருப்பத்தூரில் சமூக இடைவெளியின்றி நலத்திட்ட உதவிகள் வழங்கல்

திருப்பத்தூரில் நலத்திட்ட உதவிகள் வாங்க வந்தவர்களுக்கு ஒரே சமயத்தில் சமூக இடைவெளியின்றி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.;

Update: 2020-05-10 00:28 GMT
திருப்பத்தூர்,

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்கனவே 18 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மற்றும் நேற்று 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அதில் கோட்டை தெரு, பீர்பால் நுன்மியான் தெரு பகுதியைச் சேர்ந்த 2 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். 

இந்த நிலையில் நேற்று காலை தி.மு.க. சார்பில் 500 முஸ்லிம்களுக்கு ரம்ஜான் நோன்பு கஞ்சிக்காக மளிகைப் பொருட்கள் கோட்டை தெருவில் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருவண்ணாமலை பாராளுமன்ற தொகுதி சி.என்.அண்ணாதுரை எம்.பி., நல்லதம்பி எம்.எல்.ஏ., நகர செயலாளர் ராஜேந்திரன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

நலத்திட்ட உதவிகள் வாங்க வந்தவர்களுக்கு ஒரே சமயத்தில் சமூக இடைவெளியின்றி வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்பொழுது கோட்டை தெரு மற்றும் அருகிலுள்ள பீர்பால் நுன்மியான் தேருவைசேர்ந்த 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளதால், நலத்திட்ட உதவிகள் வாங்க வந்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம், எனவே வந்த அனைவரும் தாமாகவே முன்வந்து வைரஸ் தொற்று உள்ளதா? என சோதனை செய்துகொள்ள வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்