மதுவாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் துணை போலீஸ் சூப்பிரண்டு தகவல்

மதுவாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

Update: 2020-05-06 23:31 GMT
மன்னார்குடி, 

மதுவாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று துணை போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்தார்.

ஆலோசனை கூட்டம்

மன்னார்குடி மற்றும் தலையாமங்கலம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர்களின் ஆலோசனை கூட்டம் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் மன்னார்குடி இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் மற்றும் மன்னார்குடி-தலையாமங்கலம் போலீஸ் சரகத்திற்குட்பட்ட 14 டாஸ்மாக் கடைகளின் மேற்பார்வையாளர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் துணை போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் கூறியதாவது:-

விற்பனை மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கண்டிப்பாக முக கவசம் மற்றும் கையுறை அணிந்து இருக்க வேண்டும். முக கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக மது விற்பனை செய்யக்கூடாது. ஒரு நபருக்கு அதிகபட்சம் 5 மதுபாட்டில் மட்டும் தான் விற்பனை செய்ய வேண்டும்.

சமூக இடைவெளி

ஒரே நேரத்தில் ஐந்து நபர்கள் நின்று வாங்கும் படி ஏற்பாடுகள் செய்ய வேண்டும். மது வாங்க வருபவர்கள் சமூக இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வலியுறுத்த வேண்டும். மொத்த விற்பனை செய்யக்கூடாது. கள்ளச்சந்தையில் மதுபாட்டில் விற்பனை செய்வது தெரியவந்தால் பிடிபடுபவர்கள் எந்த கடையில் மதுபாட்டில் வாங்கினாரோ அந்த கடை மேற்பார்வையாளர் மற்றும் விற்பனையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்