தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் டாக்டர்கள் குழு

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மா ஆம்புலன்ஸ் சேவையும் பயன்பாட்டில் உள்ளது.

Update: 2020-05-04 23:08 GMT
தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தில் ஊரடங்கு காலத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க நடமாடும் டாக்டர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அம்மா ஆம்புலன்ஸ் சேவையும் பயன்பாட்டில் உள்ளது.

டாக்டர்கள் குழு

கொரோனா தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு காலத்தில் கால்நடை வளர்ப்போர் பயன்பெறும் வகையில் கால்நடைகளுக்கு தேவையான அவசர சிகிச்சை அளிக்கும் வகையில் தஞ்சை மாவட்டத்தில் நடமாடும் டாக்டர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, பூதலூர் ஒன்றிய கால்நடை வளர்ப்போர் 94450-32538, என்ற எண்ணிலும், ஒரத்தநாடு, திருவோணம் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் 9442894048 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம். கும்பகோணம் கோட்டத்தில் திருவிடைமருதூர், திருப்பனந்தாள் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் 9445032587 என்ற எண்ணிலும், பாபநாசம், அம்மாப்பேட்டை ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் 9443246910 என்ற எண்ணிகளிலும் தொடர்பு கொள்ளலாம்.

ஆம்புலன்ஸ் சேவை

பட்டுக்கோட்டை கோட்டத்தில் பட்டுக்கோட்டை, மதுக்கூர் ஒன்றிய கால்நடை வளர்ப்போர் 8883389873 என்ற எண்ணிலும், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தை சேர்ந்தவர்கள் 9445032878 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம். காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த சேவை செயல்படுத்தப்படும். மேலும் அவசர தேவைக்கு தஞ்சை மாவட்ட கால்நடை வளர்ப்போர் 1962 என்ற எண்ணில் அம்மா ஆம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கோவிந்தராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்