வேலூர், காட்பாடியில் பயிற்சியில் சேர்ந்த 2-ம் நிலை காவலர்களாக தேர்வான 728 பேர் பணியில் சேர்ந்தனர்
வேலூர், காட்பாடியில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் சேர்ந்த 2-ம் நிலை காவலர்கள் 728 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
வேலூர்,
தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு ஆணையரகம் சார்பில் கடந்த ஜனவரி மாதம் 2-ம் நிலை காவலர்களுக்கான எழுத்து தேர்வு நடந்தது. அதில், தேர்வான நபர்களுக்கு உடல்தகுதி, சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. இவற்றில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 534 ஆண்கள், 194 பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு வேலூர் கோட்டையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளியில் 6 மாத கால பயிற்சி அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
இதற்கிடையே கொரோனா தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்காரணமாக தேர்வு செய்யப்பட்ட 728 பேருக்கும் பயிற்சி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில் 2-ம் நிலை காவலர்களாக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பயிற்சி அளித்து கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் பெண்களுக்கும், காட்பாடி சேவூர் ஆயுதப்படை மைதானத்தில் ஆண்களுக்கும் பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. மேலும் 728 பேரும் நேற்று பயிற்சியில் சேரும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
கொரோனா பரிசோதனை
அதன்படி நேற்று காலை முதல் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்துக்கு பெண்கள் வரத்தொடங்கினர். அவர்களுக்கு அரசு டாக்டர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். இதனை வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ஆயுதப்படை துணை போலீஸ் சூப்பிரண்டு விநாயகம் மற்றும் போலீசார் உடனிருந்தனர். பயிற்சிக்கு சேர வந்த 194 பெண்களுக்கும் கொரோனா அறிகுறி இல்லை. தொடர்ந்து அவர்களின் அசல் கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டது.
இதேபோன்று காட்பாடி சேவூர் ஆயுதப்படை மைதானத்தில் காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு துரைபாண்டியன் தலைமையில் 534 ஆண்களுக்கும் அசல் கல்வி சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. அதைத்தொடர்ந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் யாருக்கும் பாதிப்பு இல்லை.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், 2-ம் நிலை காவலர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) முதல் அடிப்படை காவலர் பயிற்சி அளிக்கப்படும். பெண்களுக்கு நேதாஜி விளையாட்டு மைதானத்திலும், ஆண்களுக்கு வேலூர் கோட்டையிலும் தினசரி செய்ய வேண்டிய பணிகள், போலீசாரின் செயல்பாடுகள் குறித்து சொல்லி கொடுக்கப்படும். அதைத்தொடர்ந்து அவர்கள் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று தடுப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். கொரோனா தடுப்பு பணிக்கு பின்னர் 6 மாத பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவித்தனர்.