ஊரடங்கு வழக்கம் போல் நீடிக்கும் கட்டுப்பாடுகளை தளர்த்தியது புதுவை அரசு கடைகளை திறக்க அனுமதி நாராயணசாமி அறிவிப்பு
ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்தி உள்ள புதுவை அரசு, அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்யும் கடைகளை காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி வழங்கி உள்ளது.
புதுச்சேரி,
கொரோனா பாதிப்பை தொடர்ந்து நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கை, வருகிற 17-ந்தேதி வரை மேலும் 2 வாரங்களுக்கு நீட்டித்து மத்திய அரசு கடந்த வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அப்போது சில கட்டுப்பாடுகளையும் தளர்த்தியது.
அமைச்சரவை கூட்டம்
இந்த நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி தலைமையில் நேற்று புதுவை அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் ஊரடங்கு தொடர்பான கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து சில முக்கிய முடிவுகள் எடுக்கப் பட்டன.
அதன்பிறகு முதல்- அமைச்சர் நாராயணசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசின் அறிவிப்பினை தொடர்ந்து வருகிற 17-ந் தேதி வரை புதுவை மாநிலம் முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. புதுச்சேரி மாநிலத்தில் புதுச்சேரி, மாகி பகுதிகள் ஆரஞ்சு மண்டலத்திலும், காரைக்கால், ஏனாம் ஆகிய பகுதிகள் பச்சை மண்டலத்திலும் உள்ளன. அமைச்சரவை கூட்டத்தில் சில முடிவுகளை எடுத்து உள்ளோம்.
கடைகள், தொழிற்சாலை...
இதன்படி ஆரஞ்சு மண்டலத்தில் கிராமப்புறத்தில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி அளிக்கப் படுகிறது. இரு சக்கர வாகனத்தில் 2 பேர் பயணம் செய்யலாம். தொழிற்சாலைகள் இயங்க அரசிடம் அனுமதி பெற தேவையில்லை. இதேபோல் நகரப்பகுதியில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதிக்கப்படுகிறது.
தொழிற்பேட்டையில் உள்ள தொழிற்சாலைகளும் இயங்கலாம். அதே நேரத்தில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இல்லை. தற்போது அனைத்து தரப்பினரும் கடைகளை திறக்கலாம். இதற்கும் முன் அனுமதி பெற தேவையில்லை.
அதன்படி காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகள், தொழிற்சாலைகள் திறந்து வைத்து இருக்கலாம்.
கடும் நடவடிக்கை
கடைக்கு வருபவர்களுக்கு கிருமி நாசினி கைகளில் தெளிக்க வேண்டும். பணி புரியும் ஊழியர்கள் முக கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அரசுத்துறை அதிகாரிகள் வருவாய்த்துறை அதிகாரிகள் வந்து பரிசோதனையை நடத்துவார்கள். அப்போது விதிமுறை மீறல் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் இதற்கு முன் அனுமதி தேவை இல்லை. இன்று (திங்கட்கிழமை) முதல் இந்த நடைமுறை அமலுக்கு வருகிறது.
தொழிற்சாலைகளை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தொழிலாளர்களுக்கு முக கவசம் அணிய செய்ய வேண்டும். ஆரஞ்சு மண்டலத்தில் நான்கு சக்கர வாகனங்களுக்கு அனுமதியில்லை. ஆட்டோவில் ஒருவர் மட்டும் செல்லலாம். ஓட்டல்களும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படலாம். ஆனால் அங்கு அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. பார்சல்கள் வாங்கி செல்லலாம். தற்போது கடைகளை திறப்பதால் அரசுக்கு வருமானம் வரும்.
அரசு ஊழியர்கள் பணிக்கு வர வேண்டும்
அரசு துறைகளில் ‘ஏ’ மற்றும் ‘பி’ பிரிவு அலுவலர்கள் 100 சதவீதம் பணிக்கு வரவேண்டும். ‘சி’ பிரிவு ஊழியர்கள் 33 சதவீதம் பணிக்கு வர வேண்டும். தனியார் அலுவலகங்களில் 35 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம். அங்கு சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும். வெளிநாடு, வெளி மாநிலங்களில் வசிக்கும் புதுவையை சேர்ந்தவர்கள் புதுவை திரும்ப இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்கனவே அறிவிப்பு வெளியிட்டு உள்ளோம். இதுவரை 924 பேர் புதுச்சேரி வர அனுமதி கேட்டுள்ளனர். 720 பேர் வேறு பிற மாநிலங்களுக்கு செல்ல அனுமதி கேட்டு உள்ளனர். இதற்காக தனியாக ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியை நியமித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
வெளி மாநிலங்களுக்கு வேலைக்காக சென்ற தொழிலாளர்கள் மாணவ-மாணவிகளை புதுவை அரசு செலவில் அழைத்து வருவோம். அதே நேரத்தில் சுற்றுலா மற்றும் உறவினர்களை சந்திக்க சென்ற அவர்கள் அவர்களது சொந்த பணத்தில் தான் வரவேண்டும். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் புதுவை திரும்ப மத்திய அரசிடம் பேசி நடவடிக்கை எடுப்போம்.
கவனமாக இருக்க வேண்டும்
தனிமைப்படுத்தப்பட்ட பகுதியான அரியாங்குப்பம், முத்தியால்பேட்டை, ரெட்டியார்பாளையம், திருவண்டார்கோவில், திருக்கனூர் போன்ற பகுதிகளில் எந்தவித நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் நடத்த அனுமதி கிடையாது. கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில் அதிக அளவில் பாதிப்பு உள்ளது. எனவே நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மாநில எல்லைகளை கட்டுப்படுத்தி சாலைகளையும் மூடி உள்ளோம். இருந்த போதிலும் சிலர் நடந்தே புதுச்சேரிக்கு வருவார்கள். அவர்களை தடுத்து நிறுத்துவது கிராம மக்களின் பொறுப்பு. மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் புதுச்சேரிக்குள் வர அனுமதி இல்லை. தொழிற்சாலைகளில் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே பணிபுரிய வேண்டும்.
இவ்வாறு முதல்-அமைச்சர் நாராயணசாமி கூறினார்.