ஊரடங்கு உத்தரவால் வாட்டி வதைக்கும் வறுமை: நகை பட்டறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை நசுக்கிய கொரோனா
நகை பட்டறை தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கொரோனா வைரஸ் நசுக்கியுள்ளது. ஊரடங்கு உத்தரவால் தொழிலாளர்கள் வறுமையில் வாடுகின்றனர்.
தேனி,
தேனி மாவட்டத்தில், தேனி, சின்னமனூர், ஆண்டிப்பட்டி, பெரியகுளம், போடி, கம்பம் உள்பட மாவட்டம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகை பட்டறைகள் உள்ளன. இங்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்தனர். புதிதாக நகைகள் செய்தல், பழைய நகைகளை வடிவமைப்பு மாற்றம் செய்தல், பழுதடைந்த நகைகளை சீரமைத்தல், புதுப்பித்தல் போன்ற பணிகளை செய்து வருகின்றனர்.
நகை பட்டறை தொழிலாளர்கள் வாழ்க்கை கடந்த சில ஆண்டுகளாகவே நலிவடைந்து காணப்படுகிறது. நகைகளை பட்டறைகளில் செய்வதை தவிர்த்து, கடைகளில் சென்று விரும்பிய வடிவங்களில் வாங்கிக் கொள்ளும் பழக்கமே மக்களிடம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால், நலிவடைந்த நிலையில் நகை பட்டறை தொழிலாளர்கள் தொழில் செய்து வந்தனர்.
வாழ்வாதாரம் பாதிப்பு
இந்நிலையில் அவர்களின் வாழ்வை மேலும் சிதைக்கும் வகையில் கொரோனா வைரஸ் வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இதனால், நகை பட்டறைகள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன.
தேனி மாவட்டத்தில் நகை பட்டறை தொழில்களை நம்பி வாழ்ந்து வரும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கொரோனா நசுக்கியுள்ளது. அவர்கள் வேலையின்றியும், வருமானம் இன்றியும் வறுமையில் வாழ்கின்றனர். ஊரடங்கு உத்தரவால் வறுமை வாட்டி வதைப்பதால் குடும்பத்துடன் பரிதவித்து வருகின்றனர். இத்தகைய தொழிலாளர்கள் பலரும் தொழிலாளர் நல வாரியங்களில் பதிவு செய்யாமல் உள்ளனர். இதனால், நல வாரியம் மூலம் நிவாரணம் பெற முடியாத நிலையில் உள்ளனர். எனவே, இத்தகைய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரம் கருதி நிவாரண உதவிகள் வழங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.