சென்னை, பெங்களூருவில் இருந்து வந்த 107 பேருக்கு கொரோனா பரிசோதனை
சென்னை, பெங்களூருவில் இருந்து வந்த 107 பேருக்கு கொரோனா பரிசோதனை.
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சந்தப்பேட்டை, வீரட்டகரம், வேங்கூர் கரடி, டி.கீரனூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த 26 பேர் சென்னை மற்றும் பெங்களூருவில் வேலை பார்த்து வந்தனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் அனைவரும் சொந்த ஊருக்கு திரும்பி வந்தனர். இதுபற்றி அறிந்த தாசில்தார் சிவசங்கரன், ஜி.அரியூர் வட்டார சுகாதார மருத்துவக்குழுவினர் விரைந்து சென்று 26 பேரிடமும் விசாரித்தனர். பின்னர் அவர்களுக்கு கொரோனா அறிகுறி ஏதேனும் உள்ளதா? என பரிசோதனை மேற்கொண்டனர். பின்னர் அவரவர் வீடுகளில் தனிமைப்படுத்திக்கொண்டு இருக்கும்படியும், உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் உடனே தகவல் தெரிவிக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தினர். இதையடுத்து 26 பேருடைய வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்ட வீடுகள் என்பதற்கான ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது.
இதேபோல் திருவள்ளுவர் மாவட்டத்தில் இருந்து திருக்கோவிலூர் பகுதிக்கு 76 பேருக்கும், பெங்களூருவில் இருந்து வந்த 5 பேருக்கும் சுகாதாரத்துறையினர் மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதுதவிர சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்று வந்த 14 பேர், உளுந்தூர்பேட்டை அருகே குமாரமங்கலம் அரசு மாதிரி பள்ளி கட்டிடத்தில புதிதாக அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு தனிமைப்படுத்தப்பட்ட கண்காணிப்பு மையத்தில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு ரத்த மாதிரி எடுக்கப்பட்டு, பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.