பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஊரடங்கை மீறியதாக இதுவரை 7,023 வாகனங்கள் பறிமுதல்

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஊரடங்கை மீறிய தாக இதுவரை 7,023 வாகனங்கள் போலீ சாரால் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன.

Update: 2020-05-03 06:06 GMT
பெரம்பலூர், 

பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் ஊரடங்கை மீறிய தாக இதுவரை 7,023 வாகனங்கள் போலீ சாரால் பறிமுதல் செய் யப்பட்டுள்ளன. 9,357 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாதுகாப்பு பணியில் போலீசார்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் பாதுகாப்பு பணியில் போலீஸ் சூப்பி ரண்டு நிஷா பார்த்திபன் தலைமையிலும், அரியலூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு சீனிவாசன் தலைமையிலும் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

ஏற்கனவே அரசு அறிவித்த நேரத்துக்கு பிறகும், சாலையில் தேவையில்லாமல் இரண்டு, மூன்று, நான்கு சக்கர வாகனங்களில் சுற்றித்திரிபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தும், வாகனங்களை பறிமுதல் செய்து, கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தேவையில்லாமல் சுற்றித்திரிந்தவர்கள்

அந்த வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்திய நாளில் இருந்து நேற்று வரை பெரம்பலூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவினை மீறி வீட்டை விட்டு தேவையில் லாமல் சுற்றித்திரிந் ததாக மொத்தம் 3,903 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 4,166 பேரை கைது செய்த போலீசார், அவர்களை சொந்த ஜாமீனில் விடு வித்துள்ளனர். மேலும் 2,015 இரு சக்கர வாகனங்களும், 32 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப் பட்டுள் ளன. இதே போல் அரியலூர் மாவட்டத்தில் நேற்று இரவு வரை வீட்டை விட்டு தேவையில்லாமல் சுற்றித் திரிந்ததாக மொத்தம் 5,454 வழக்குகள் போலீசாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 5,487 பேரை கைது செய்த போலீசார், அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித் துள்ளனர். மேலும் 4,895 இரு சக்கர வாகனங்களும், 81 நான்கு சக்கர வாகனங்களும் பறிமுதல் செய்யப் பட்டுள் ளன.

மேலும் செய்திகள்