சாராயம் ஒழிப்பது தொடர்பாக கலெக்டர் தலைமையில் காவல்துறையினருடன் ஆய்வுக்கூட்டம்

திருவள்ளூரில் சாராயம் ஒழிப்பது தொடர்பாக கலெக்டர் தலைமையில் காவல்துறையினருடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Update: 2020-05-02 22:30 GMT
திருவள்ளூர், 

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் சாராயம் ஒழிப்பு தொடர்பாக காவல் துறை அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

பின்னர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் கூட்டத்தை தொடங்கி வைத்து பேசுகையில், நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு டாஸ்மாக் கடைகள் மற்றும் பார்கள் முழுமையாக மூடப்பட்டு உள்ளது.

இதனை காரணமாக கொண்டு மாவட்டத்தில் ஆங்காங்கே சாராயம் தயாரித்து விற்பனை செய்து வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன. இதுபோன்ற குற்றச்செயலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்வதற்கு காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் இதர துறை அலுவலர்களு டன் ஆய்வுக்கூட்டம் மேற்கொள்ளப்பட்டது. 

சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் துரிதமாக நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் சாராயம் தயாரிப்பது குறித்து கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன், வருவாய் அலுவலர் முத்துசாமி மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அரசு அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்