முதலிபாளையம் ஊராட்சியில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் - கரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. வழங்கினார்
முதலிபாளையம் ஊராட்சியில் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு ரைப்புதூர் நடராஜன் எம்.எல்.ஏ. நிவாரண பொருட்கள் வழங்கினார்.
நல்லூர்,
பல்லடம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் பல்லடம் எம்.எல்.ஏ., கரைப்புதூர் நடராஜன் மற்றும் ஊராட்சி தலைவர் மயூரி பிரியா நடராஜ் ஆகியோரின் சொந்த நிதி ரூ.4 லட்சம் மதிப்பில் கொரோனா ஒழிப்பு பணியில் அயராது பாடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடை மற்றும் தொப்பி, முக கவசம், கையுறைகளையும், அதே பகுதியில் வசிக்கும் 2 ஆயிரம் குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி, முககவசங்களையும் வழங்கினர்.
இதை நேற்று காலை முதலிபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதில் பல்லடம் சட்டமன்ற உறுப்பினர் கரைப்புதூர் நடராஜன் கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு சீருடையும், 5 கிலோ அரிசியும் வழங்கினார். அப்போது பொதுமக்களுக்கு சமூக இடைவெளியை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் ஊராட்சி தலைவர் மயூரிபிரியா நடராஜ், ஒன்றிய கவுன்சிலர் கல்பனா வேலுச்சாமி, ஊராட்சி முன்னாள் துணைத்தலைவர் நடராஜ், அ.தி.மு.க ஊராட்சி கழக செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, சரவணமுத்து, சின்னசாமி, கிளைக்கழக செயலாளர்கள் கிட்டுசாமி, மணி, காசீம்பாய், முருகேஷ், ஆனந்த், ஜெகநாதன், பொன்னுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.