காலாவதியான அனுமதி கடிதங்களை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் - கலெக்டர் தகவல்
காலாவதியான அனுமதி கடிதங்களை பயன்படுத்தி இயக்கப்படும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என்று ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் கூறியுள்ளார்.
கடத்தூர்,
ஈரோடு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் நேற்று கோபிக்கு வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
இதுவரை வெளிமாநிலங்களில் இருந்து வந்த 103 பேர்கள் பள்ளிக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டு கண்காணிப்பில் உள்ளனர். இதேபோல் வெளிமாவட்டங்களில் இருந்து வந்த 374 பேர் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் 133 சோதனை சாவடிகள் உள்ளன.
இதில் 90 சாவடிகள் மூடப்பட்டு விட்டன. மீதமுள்ள சோதனை சாவடிகள் வழியாக வரும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே மாவட்டத்துக்குள் செல்ல அனுமதிக்கப்படுகின்றன. காலாவதியான அனுமதி கடிதங்களை பயன்படுத்தி வாகனங்கள் இயக்கப்பட்டால், அந்த வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.