ரேஷன் பொருட்களை டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் பெற்றுக்கொள்ளலாம் கலெக்டர் தகவல்

ரேஷன் பொருட்களை டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

Update: 2020-05-01 05:10 GMT
புதுக்கோட்டை, 

ரேஷன் பொருட்களை டோக்கனில் குறிப்பிட்டுள்ள தேதியில் பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட கலெக்டர் கூறியுள்ளார்.

ரேஷன் பொருட்கள்

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:-

குடும்ப அட்டைகளில் உள்ள அனைத்து பயனாளிகளுக்கும் தலா 5 கிலோ வீதம் ஏப்ரல், மே மற்றும் ஜூன் வரை 3 மாத காலத்திற்கு கூடுதல் அரிசி பொது வினியோகத் திட்டத்தின் கீழ் தொடர்புடைய ரேஷன் கடைகளில் டோக்கன்கள் அடிப்படையில் வருகிற 4-ந்தேதி முதல் வழங்கப்படும். மேலும் அனைத்து அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர் களுக்கும் கடந்த மாதம் வழங்கப்பட்டது போல், மே மாதத்திற்கும் விலையின்றி வழங்கப்படும். ரேஷன் கடைகளுக்கு குடும்ப அட்டைதாரர்கள் அவரவருக்குரிய டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள் மற்றும் நேரத்தில் வந்து அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். அந்தியோதயா அன்னயோஜனா குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே வழங்கப்படும் 35 கிலோ அரிசியுடன், பிரதம மந்திரி காரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் நபர் ஒருவருக்கு 5 கிலோ அரிசி கூடுதலாக வழங்கப் படும்.

சமூக இடைவெளியை பின்பற்றி...

பிரதம மந்திரி காரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் அந்தியோதயா அன்னயோஜனா முன்னுரிமை மற்றும் முன்னுரிமையற்ற குடும்ப அட்டைதாரர் களுக்கு ஏப்ரல் மாதம் கூடுதலாக வழங்கப்பட வேண்டிய அரிசி வழங்கப்படாததால் மே மாதத்திற்கு வழங்கப்படும் அரிசி அளவுடன் கூடுதலாக ஏப்ரல் மாதத்திற்கு வழங்க வேண்டிய அரிசியின் அளவில் 50 சதவீதம், மே மாதத்திலும், மீதமுள்ள 50 சதவீதம் ஜூன் மாதத்திலும் வழங்கப்பட வேண்டிய அரிசியுடன் சேர்த்து வழங்கப்படும்.

பிரதம மந்திரி காரீப் கல்யாண் அன்னயோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அரிசி மற்றும் அனைத்து பொருட்களும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரே தவணையில் வழங்கப்படும். ரேஷன் கடைகளில் அத்தியாவசிய பொருட்களை பெற வரும் குடும்ப அட்டைதாரர்கள் சமூக இடைவெளியை பின்பற்றி அத்தியாவசிய பொருட்களை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்