சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக்கப்படாததால் வருவாய் இன்றி தவிக்கும் முடிதிருத்தும் தொழிலாளர்கள்
ஊரடங்கால் கடந்த ஒரு மாதமாக சலூன் கடைகள், அழகு நிலையங்கள் திறக் கப்படாததால் அதை நம்பியுள்ள தொழிலாளர் கள் வருவாய் இன்றி தவிக்கின்றனர்.
புதுச்சேரி,
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. அதன் காரணமாக மக்கள் அனைவரும் வீடு களிலேயே முடங்கி உள்ளனர். பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டுமே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டும் என்றும், அப்போது சமூக இடை வெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத் தப்பட்டு உள்ளனர்.
புதுச்சேரியில் பால், மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி கடைகளை மட்டும் குறிப்பிட்ட சிலமணி நேரங் களே திறக்க அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. டீக்கடை, சுவீட் கடைகள், சலூன்கள், பெண் கள் அழகு நிலையம், செல் போன் கடைகள் உள்ளிட்ட வற்றை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
புதர்கள் போன்று தாடியுடன்...
ஊரடங்கால் கட்டுமான தொழிலாளர்கள், ஆட்டோ, கார், வேன் டிரைவர்கள், நடைபாதை வியாபாரிகள், சலூன் கடை, அழகு நிலையத்தில் பணிபுரிவோர் உள்ளிட்டோர் தங்களின் அன்றாட வாழ்வாதாரத்தை யும், வாழ்க்கையையும் தொலைத்து உள்ளனர். முகசவரம், முடி வெட்டுவதற் காகவும், தாடி மீசை ஒதுக்கு வதற்காகவும், முடிக்கு சாயம் (டை) பூசுவதற்காகவும் சலூன் கடைகளை நம்பி இருந்தவர்கள் பெரும் சிரமப்படுகின்றனர்.
முடிதிருத்த முடியாததால், நீளமாக வளர்ந்து தலை பரட்டையாக காட்சி அளிப் பதை பார்க்க முடிகிறது. சேவிங் செய்ய முடியாதவர்கள் புதர்கள் போன்று தாடியுடன் திரிகின்றனர். சில வீடுகளில் பெண்கள் குழந்தைகளுக்கு தங்களுக்கு தெரிந்த முறையில் முடி வெட்டி விடுகிறார்கள்.
கிராமப்புறங்களில் உள்ள வர்களில் சிலர் தங்களுக்கு தெரிந்த தொழிலாளர்களை வயல்வெளி, கரும்பு தோட் டங்கள், கால்வாய், பம்பு செட் பகுதிகளுக்கு வரவழைத்து முடி வெட்டி நிலைமையை சமாளித்து வருகிறார்கள்.
வருவாய் இன்றி தவிக்கும் தொழிலாளர்கள்
ஆனால் நகர பகுதியில் அவ்வாறு செய்வது கடினம். சலூன் கடைகள் மூலம் எளிதில் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளதால், அதனை திறக்க அதிகாரிகள் அனுமதி மறுக்கின்றனர். ஊரடங்கு காரணமாக தங்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக சலூன் கடைகள், அழகு நிலையங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் தெரிவிக்கின் றனர்.
இதுகுறித்து புதுச்சேரியை சேர்ந்த முடிதிருத்தும் ஒருவர் கூறியதாவது:-
ஊரடங்கால் பெரும் பாலான கடைகள் திறக்கப் படவில்லை. அவற்றில் சலூன் கடையும் ஒன்று. இதனை நம்பி வாழும் ஆயிரக் கணக்கான குடும்பத்தினர் வருமானம் இன்றி, பொருளா தார ரீதியாக கடும் நெருக் கடியை சந்தித்து வருகிறார்கள். அன்றாட தேவைகளை சமாளிக்க சில சமயங்களில் மற்றவர்களின் உதவியை நாடும் நிலை உள்ளது. அதேபோன்று அழகு நிலையங் களில் பணிபுரியும் பெண்களும் பாதிப்படைந்துள்ளனர்.
நிவாரண உதவி
முடிதிருத்துவோர் நலச் சங்கத்தை சேர்ந்தவர்களுக்கு அரசு நிவாரண உதவி எதுவும் வழங்கவில்லை. கட்டுமான தொழிலாளர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கியது போன்று அரசு எங்களுக்கும் நிவாரண உதவிகள் வழங்க வேண்டும். சலூன் கடைகளை வாரத்தில் 2 நாட்கள் குறிப்பிட்ட நேரத்தில் திறக்க அரசு அனுமதிக்க வேண்டும். முகக்கவசம், முடிவெட்ட கையுறை அணிந்து நாங்கள் பணிபுரிய தயாராக உள்ளோம். இதுதொடர்பாக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.