கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்துறை ஊழியர்களுக்கு பரிசோதனை

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள வருவாய்துறை ஊழியர்களுக்கு பரிசோதனை.

Update: 2020-05-01 00:34 GMT
வேலூர்,

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணியில் சுகாதாரத்துறையினருடன் இணைந்து வருவாய்துறை, காவல்துறை, உள்ளாட்சி அமைப்புகளை சேர்ந்தவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பணியில் ஈடுபடுபவர்களும் எதிர்பாராதவிதமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகிறார்கள். எனவே முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் அனைத்து துறையினருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி வேலூர், காட்பாடி தாலுகாவில் பணிபுரியும் வருவாய்துறை ஊழியர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே நேற்று நடந்தது. இதில், அரசு டாக்டர்கள் கலந்து கொண்டு சளி மாதிரி சேகரித்தனர். இதில், பங்கேற்ற 246 பேரின் சளி மாதிரிகள் சோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்