பண்ருட்டி, சிதம்பரம் பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி
பண்ருட்டி, சிதம்பரம் பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நெல்லிக்குப்பம்,
புவனகிரி நகர அ.தி.மு.க. சார்பில் ஏழை, எளிய குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி புவனகிரியில் நடைபெற்றது. இதற்கு நகர செயலாளர் செல்வக்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் உமா மகேஸ்வரன், மாவட்ட இணை செயலாளர் செஞ்சி லட்சுமி இளங்கோ, மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் லெனின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன், கலைச்செல்வன் எம்.எல்.ஏ. ஆகியோர் கலந்து கொண்டு ஏழை, எளிய மக்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் கூட்டுறவு சங்க தலைவர் சரவணன், ரகுராமன், நாகராஜன், இளவரசன், கிருஷ்ணமூர்த்தி, பழனியாண்டி, சிவஞானம், சுகந்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பட்டு சொசைட்டி கூட்டுறவு சங்க தலைவர் ஜெயராஜ் நன்றி கூறினார்.
சிதம்பரம்
சிதம்பரம் புறவழிச்சாலை இன்டேன் கியாஸ் குடோன் அருகில் மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றியவர்களுக்கான சிறப்பு பள்ளி மற்றும் ஆதரவற்றோர் முதியோர் இல்லம் செயல்பட்டு வருகிறது. இங்கு சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் பாண்டியன் சென்று, மாற்றுத்திறனாளிகளின் உணவிற்கு தேவையான அரிசி, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை பள்ளி நிர்வாகி கலியபெருமாளிடம் வழங்கினர். அப்போது பள்ளியின் மேலாளர் கலாவதி, ஆசிரியர்கள் சுனிதா, அபிநயா, பிரேமலதா, காயத்ரி ஆகியோர் உடனிருந்தனர்.
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவில் போலீஸ் நிலையத்தில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் போலீசாருக்கு காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர் முருகுமாறன் தனது சொந்த செலவில் பால், பழங்கள், அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் இளவரசி, அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வாசு.முருகையன், பேரூர் செயலாளர் எம்.ஜி.ஆர். தாசன், பேரூர் பொருளாளர் வசந்தகுமார், ஸ்ரீ நாகா கியாஸ் இயக்குனர் சகாதேவன், ஜெயலலிதா பேரவை செயலாளர் ரவிச்சந்திரன், தனிப்பிரிவு சப்-இன்ஸ்பெக் டர் லெனின், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் தனசேகர், பிரம்மதீஸ்வரன், சஞ்சய் காந்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நெல்லிக்குப்பம்
நெல்லிக்குப்பம் நகராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்கு நகராட்சி ஆணையாளர் பிரபாகரன் தலைமை தாங்கினார். நகர அ.தி.மு.க. செயலாளரும், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவருமான சவுந்தர், நகராட்சி பொறியாளர் சிவசங்கரன், துப்புரவு அலுவலர் சக்திவேல், உணவு பாதுகாப்பு அதிகாரி ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக சத்யா பன்னீர்செல்வம் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு அரிசி, மளிகை பொருட்களை வழங்கினார். இதில் பணி மேற்பார்வையாளர் வாசு, நகராட்சி வருவாய் ஆய்வாளர் கருணாமூர்த்தி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் சேகர், நகர துணை செயலாளர் ஜின்னா, பொருளாளர் ரங்கராஜன், மாவட்ட பிரதிநிதி அழகு, இளைஞர் அணி இணை செயலாளர் பன்னீர்செல்வம், முன்னாள் துணை செயலாளர் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட பிரதிநிதி சேகர், பாரி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
காட்டுமன்னார்கோவில்
காட்டுமன்னார்கோவிலில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நடைபெற்றது. இதில் கடலூர் நாடாளுமன்ற தொகுதி செயலாளர் பா.தாமரைச்செல்வன் தலைமையில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பால.அறவாழி, மாவட்ட துணை செயலாளர் செல்வமணி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற தொகுதி செயலாளர் மணவாளன், மாநில துணை செயலாளர் அந்தோணிசிங், சட்டமன்ற தொகுதி துணை செயலாளர் சக்திவேல், காட்டுமன்னார்கோவில் நகர செயலாளர்கள் திருநாவுக்கரசு, நாகராஜ், ஒன்றிய செயலாளர்கள் பரமேஸ்வரன், கமல் ராஜ், வில்லியம்ஸ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
குமாரக்குடி
விக்கிரவாண்டி முதல் கும்ப கோணம் வரை தேசிய நெடுஞ்சாலை அமைக்கும் பணியில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். தற்போது கொரோனா ஊரடங்கு உத்தரவினால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அ.தி.மு.க. சார்பில் புவனகிரி ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், ஒன்றியக்குழு தலைவருமான சி.என்.சிவப்பிரகாசம் குமாரக்குடியில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட 25 வடமாநில தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் சேத்தியாத்தோப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமதாஸ், ஜெயசீலன், சபரி, பிரகாஷ், ஜபருல்லா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
குறிஞ்சிப்பாடி
குறிஞ்சிப்பாடி பேரூராட்சியில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் செயல் அலுவலர் சுமா கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு மளிகை, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் துப்புரவு ஆய்வாளர் கணேசன், இளநிலை உதவி அலுவலர் முருகவேல், சுகாதார ஆய்வாளர் சுகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் முத்துலிங்கம், துப்புரவு பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார்.