உழவர் சந்தைக்கு காய்கறி வாங்க வந்தவர்களை விரட்டி விரட்டி கொட்டிய குளவிகள் 12 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை
புதுவை உழவர் சந்தையில் நேற்று காலை காய்கறி வாங்க வந்தவர்களை குளவிகள் விரட்டி விரட்டி கொட்டியது. இதில் 12 பேர் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர்.
புதுச்சேரி,
புதுவை பழைய பஸ் நிலையம் பகுதியில் உழவர் சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு புதுவை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் கடை அமைத்து காய்கறி விற்பனை செய்து வருகின்றனர். நேற்று காலை 6.30 மணி அளவில் காய்கறி வாங்குவதற்காக ஏராளமானவர்கள் அங்கு வந்தனர். அப்போது அருகில் உள்ள தாவரவியல் பூங்காவில் இருந்து குளவிகள் படையெடுத்து உழவர் சந்தை பகுதிக்கு வந்தன. அங்கிருந்தவர்களை குளவிகள் விரட்டி விரட்டி கொட்டியது. இதற்கு பயந்து மக்கள் நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். இதனால் அந்த பகுதி காலையிலேயே பரபரப்பாக காணப்பட்டது.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை
குளவிகள் கொட்டியதில் 12 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் வலியில் துடித்தனர். உடனே அவர்கள் அனைவரும் புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அதில் 7 பேர் புறநோயாளியாக சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்கள். 5 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர்களை முதல்-அமைச்சர் நாராயணசாமி, அன்பழகன் எம்.எல்.ஏ. ஆகியோர் நேரில் சந்தித்து உடல் நலம் விசாரித்தனர். குளவி கொட்டியதைத் தொடர்ந்து காலை 9.30 மணி அளவில் உழவர் சந்தை மூடப்பட்டது.