கொரோனா தொற்று ஏற்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்ட வேதாச்சலபுரத்தில் அரசு அதிகாரிகள் ஆய்வு
கொரோனா தொற்று ஏற்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்ட வேதாச்சலபுரத்தில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
தோகைமலை,
கொரோனா தொற்று ஏற்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்ட வேதாச்சலபுரத்தில் அரசு அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
அரசு அதிகாரிகள் ஆய்வு
கரூர் மாவட்டம், தோகைமலை வேதாச்சலபுரத்தை சேர்ந்த 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு குணமடைந்து வீடு திரும்பினார். மற்றொருவர் கரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் அந்த பகுதி முழுவதும் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதையடுத்து சீல் வைக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஆதிதிராவிடர் நலத்துறை ஆணையர் முனியநாதன், தமிழக ஏ.டி.ஜி.பி வி.பி.சிங் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.
அப்போது கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது?, தொற்று ஏற்பட்டவர்கள் வசிக்கும் பகுதிகள் எவ்வாறு கண்காணிக்கப்படுகிறது, தொற்று ஏற்பட்ட குடும்பத்திற்கு உணவு, குடிநீர், மருந்துகள், அத்தியாவசிய பொருட்கள் எப்படி வழங்கப்பட்டு வருகிறது மற்றும் தொற்று ஏற்பட்டவர்கள் சென்று வந்த விவரங்கள் உள்பட பல்வேறு தகவல்களை அந்த பகுதியில் உள்ள தன்னார்வலர்களிடம் கேட்டறிந்தனர்.
கண்காணிப்பு
பின்னர் தொற்று ஏற்பட்டவர்களின் குடும்பங்கள், இவர்களிடம் நேரடியாக தொடர்பில் இருந்தவர்கள், அருகில் வசிக்கும் குடும்பங்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதா, இதில் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் எத்தனை, சுகாதார பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு எவ்வாறு பாதுகாப்பு அளிக்கப்படுகிறது என்று வட்டார மருத்துவ அலுவலர் தியாகராஜனிடம் கேட்டறிந்தனர்.
மேலும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணிப்பது, வெளியூர் பகுதிகளில் இருந்து வரும் நபர்களை தொடர்ந்து கண்காணித்தல் மற்றும் சுகாதார பணிகள், தூய்மை பணிகள், பாதுகாப்பு போன்ற பணிகளில் ஈடுபடுவோர் உரிய பாதுகாப்புடன் பணியாற்றுவதை உறுதி படுத்த வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.