கர்நாடகாவில் தவிக்கும் கல்வராயன்மலை தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்பி வர உதவி செய்யுமாறு கலெக்டருக்கு கோரிக்கை
கூலி வேலைக்காக கர்நாடகா சென்ற கல்வராயன்மலை கிராம மக்கள் சொந்த ஊருக்கு திரும்பி வரமுடியாமல் அங்கேயே தவிக்கிறார்கள். சொந்த ஊருக்கு திரும்பி வர உதவி செய்யுமாறு கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலைப்பகுதியில் 171 கிராமங்கள் உள்ளன. இங்கு 75 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இதில் தாள்மதூர், மேல்முண்டியூர், மடப்பட்டு, எருக்கம்பட்டு, மேல்வென்னியூர், ஆரம்பூண்டி, கவ்வியம், வெள்ளிமலை, கரியாலூர், கொட்டபுத்தூர் போன்ற கிராமங்களைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கூலிவேலைக்காக கர்நாடகாவுக்கு சென்றனர். அங்கு குடகு மற்றும் சிக்மகளூரு மாவட்டங்களில் உள்ள காப்பி மற்றும் மிளகு எஸ்டேட்டுகளில் வேலை பார்த்து வந்தனர்.
இந்த நிலையில் கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் கடந்த 37 நாட்களாக அவர்கள் வேலையின்றி, எஸ்டேட்டுகளில் உள்ள வீடுகளில் தங்கியுள்ளனர். வேலையில்லாததால், அவர்களிடம் இருந்த பணத்தை சாப்பாட்டுக்காக செலவழித்து விட்டனர். இப்போது அவர்களிடம் பணம் இல்லாததால், சாப்பிடுவதற்கு உணவு பொருட்கள் வாங்க முடியாமலும், ஊருக்கு திரும்ப முடியாமலும் பரிதவிக்கின்றனர்.
பணமும் இல்லை, உணவும் இல்லை
இது பற்றி கர்நாடகாவில் சிக்கி உள்ள மேல்முண்டியூர் கிராமத்தை சேர்ந்த மஞ்சுளா என்பவர் கூறுகையில், நாங்கள் கடந்த 5 மாத காலமாக எஸ்டேட்டில் தங்கி வேலை பார்த்து வந்தோம். கடந்த ஒரு மாதமாக வேலை இல்லாததால், ஏற்கனவே கையில் இருந்த பணத்தை செலவு செய்து விட்டோம், இப்போது பணமும் இல்லாமல் உணவும் இல்லாமல், இங்கு இருக்கவும் முடியாமல், சொந்த ஊருக்கு திரும்பவும் முடியாமல் தவிக்கிறோம், நாங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வர கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
கலெக்டர் உதவுவாரா?
அதேபோல் கல்வராயன்மலையைச்சேர்ந்த 200-க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஆந்திரா மற்றும் கேரளாவுக்கு வேலைக்கு சென்ற இடத்தில் வேலையின்றி, உணவின்றி பரிதவிக்கிறார்கள். எனவே கர்நாடகா, கேரளா மற்றும் ஆந்திராவில் தவிக்கிற கல்வராயன்மலையை சேர்ந்த தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர உதவி செய்ய வேண்டும் என்று கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டருக்கு தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.