மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வரவில்லை காத்திருப்பவர்கள் எண்ணிக்கை 754 ஆக உயர்வு

கடலூர் மாவட்டத்தில் நேற்று யாருக்கும் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளியாகவில்லை. இ தன் மூலம் பரிசோதனை முடிவுகள் வர வேண்டியவர்களின் எண்ணிக்கை 754 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-04-28 21:50 GMT
கடலூர்,

கடலூர் மாவட்டத்தில 26 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். அவர்களில் 18 பேர் குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர். தற்போது 8 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இது தவிர கடலூர், விருத்தாசலம் அரசு மருத்துவமனைகள் மற்றும் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் 72 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் இதுவரை 2505 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் 26 பேருக்கு உறுதிசெய்யப்பட்டது. 2363 பேருக்கு பாதிப்பு இல்லை.

754 ஆக உயர்வு

இந்த நிலையில் 454 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர இருந்தது. இந்த முடிவுகள் நேற்று இரவு 10.30 மணி வரை யாருக்கும் வரவில்லை. அதே நேரத்தில், நேற்று 300 பேருக்கு உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு சிதம்பரம் மற்றும் புதுச்சேரி மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 754 பேருக்கு முடிவுகள் வர வேண்டும் என்று சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். கடலூர் மாவட்டத்தில் கடந்த ஒருவாரத்துக்கு மேலாக பாதிப்புகள் இல்லாமல் இருந்து வந்தது மக்களை நிம்மதி அடைய செய்தது. இந்த சூழ்நிலையில் தற்போது 754 பேருக்கு பரிசோதனை முடிவுகள் வர வேண்டியிருப்பது எங்கே மீண்டும் பாதிப்புகள் உயருமோ என்கிற அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகள்