ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி

ஊரடங்கால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கப்பட்டது.

Update: 2020-04-28 21:44 GMT
திட்டக்குடி,

ஊரடங்கால் பாதிக்கப்பட்ட திட்டக்குடி பேரூராட்சிக்கு உள்பட்ட பொதுமக்களுக்கு அ.தி.மு.க. சார்பில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி திட்டக்குடியில் நடைபெற்றது. இதில் கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான அருண்மொழிதேவன் கலந்து கொண்டு 3 ஆயிரத்து 500 பேருக்கு ரூ.9 லட்சம் மதிப்பில் அரிசி, காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கலைச்செல்வன் எம்.எல்.ஏ. ,முன்னாள் எம்.எல்.ஏ. ராமு, நகர செயலாளர்கள் மங்கலம்பேட்டை பாஸ்கர், திட்டக்குடி நீதிமன்னன், நகர துணை செயலாளர் கண்ணகி கனகசபை, வார்டு செயலாளர்கள் பாஸ்கர், இளங்கோவன் உள்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

கபசுர பொடி

திட்டக்குடி அருகே கீழ்செருவாய், இடைச்செருவாயில் அ.தி.மு.க. சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளரும், கூட்டுறவு வங்கி தலைவருமான வாகை இளங்கோவன் தலைமை தாங்கினார். இயக்குனர் வெள்ளையம்மாள் கலியமூர்த்தி, மாணவரணி செயலாளர் எழிலரசன், ஊராட்சி மன்ற தலைவர்கள் ரத்தினம், வெங்கடேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மங்களூர் ஒன்றிய செயலாளர் கந்தசாமி கலந்து கொண்டு தூய்மை பணியாளர்கள், ஏழை-எளிய மக்களுக்குநிவாரண உதவியாக அரிசி, மளிகை பொருட்கள், கபசுர பொடி ஆகியவற்றை வழங்கினார். இதில் கிளை செயலாளர்கள் ராமநடராஜன், செல்வராசு, ஊராட்சி செயலாளர்கள் கருணாநிதி, கண்ணன், செல்லம்மாள் செல்லமுத்து, ராஜகோபால், மாரிமுத்து, கார்த்திக், புருஷோத்தமன், ராமசாமி, ரமேஷ், ராமமூர்த்தி, தியாகராஜன், அழகுவேல், பால்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

குறிஞ்சிப்பாடி

தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் நெய்வேலி சட்டமன்ற தொகுதி குறிஞ்சிப்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட 12 ஊராட்சிகளில் வசிக்கும் முடி திருத்துவோர், சலவை தொழிலாளர்கள் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு சத்திரம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் சட்டமன்ற உறுப்பினர் சபா.ராஜேந்திரன் கலந்து கொண்டு அரிசி, காய்கறி உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கினார். இதில் பண்ருட்டி ஒன்றிய குழு தலைவர் சபா.பாலமுருகன், முன்னாள் ஒன்றிய செயலாளர் குணசேகரன், நெய்வேலி நகர செயலாளர் பக்கிரிசாமி, ஊராட்சி செயலாளர்கள் கோவிந்தராஜ், காசிலிங்கம், புலியூர் ஜெகதீசன், காசிநாதன், கண்ணுத்தோப்பு வெங்கடேசன், ஜோதிமணி, கீழூர் அவைத்தலைவர் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்