சின்னாளபட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது

சின்னாளபட்டி பேரூராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்கள் அ.தி.மு.க. சார்பில் வழங்கப்பட்டது.;

Update: 2020-04-28 00:45 GMT
சின்னாளபட்டி,

சின்னாளபட்டி பேரூராட்சியில் 100-க்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் தற்காலிக தூய்மை பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர். அவர்களுக்கு வனத்துறை அமைச்சர் சீனிவாசன் ஆலோசனையின்பேரில், ஆத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் அரிசி, பருப்பு உள்ளிட்ட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு ஆத்தூர் ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பி.கே.டி.நடராஜன் தலைமை தாங்கி, தூய்மை பணியாளர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். அப்போது, தூய்மை பணியாளர்களை கடவுளுக்கு நிகராக மதிப்பதாக கூறி சமூக இடைவெளிவிட்டு அவர்களது காலில் விழுந்து பி.கே.டி.நடராஜன் நன்றி தெரிவித்தார். இதேபோல் சலவை தொழிலாளர்கள் மற்றும் ஏழைகளுக்கும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கலையரசி, ஆத்தூர் ஒன்றிய முன்னாள் தலைவர் கோபி, மாவட்ட மீனவரணி இணை செயலாளர் அந்தோணிசாமி, சின்னாளபட்டி பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் தங்கம், இளைஞரணி துணை செயலாளர் பித்தளைபட்டி நடராஜன், சின்னாளபட்டி நகர செயலாளர் கணேஷ் பிரபு உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்