திருப்பூர் பெரியார்காலனியில் 900 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் - கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. வழங்கினார்

திருப்பூர் பெரியார்காலனியில் 900 குடும்பங்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கும் நிகச்சியில் கலந்துகொண்டு கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. பொருட்களை வழங்கினார்.

Update: 2020-04-27 20:55 GMT
அனுப்பர்பாளையம், 

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு பொதுமக்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர். இதனால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வேலைக்கு செல்லாததால் பொருளாதார தேவைகளுடன் உள்ளனர். இந்த சூழலிலும் மாநகராட்சி பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர்.

இதையடுத்து பெரியார்காலனி 5 மற்றும் 6-வது வார்டுகளில் பணியாற்றும் மாநகராட்சி பணியாளர்கள் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு 6-வது வார்டு அ.தி.மு.க. சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

இதை கே.என்.விஜயகுமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார். இதன்படி 800 ஏழை குடும்பங்கள் மற்றும் 100 மாநகராட்சி பணியாளர்கள் என மொத்தம் 900 குடும்பங்களுக்கு அரிசி, பருப்பு, காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை அ.தி.மு.க. 15 வேலம்பாளையம் பகுதி பொருளாளர் ஈஸ்வரன் தலைமையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இதில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், 1-வது மண்டல உதவி கமிஷனர் வாசுக்குமார், சுகாதார அலுவலர் முருகன், முன்னாள் மண்டல தலைவர் ராதாகிருஷ்ணன், வளர்மதி கூட்டுறவு சங்க தலைவர் கருணாகரன், முன்னாள் கவுன்சிலர்கள் சுப்பு, சின்னசாமி, கோட்டாபாலு, பாத்திர சங்க தலைவர் பாலசுப்பிரமணியம், அ.தி.மு.க. நிர்வாகிகள் பிரகாஷ், ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்