போளூரில் காற்றுடன் கூடிய பலத்த மழை: 3 ஆயிரம் நெல் மூட்டைகள் நாசம் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
போளூரில் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் 3 ஆயிரம் நெல் மூட்டைகள் மழையில் நனைந்து நாசமடைந்தது.
போளூர்,
போளூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில வாரங்களாக வெயில் தாக்கம் படிப்படியாக உயர்ந்து 100 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரித்து வந்தது. இதனால் பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இந்த நிலையில் போளூரில் நேற்று முன்தினம் மாலை சூறாவளி காற்றுடன் 22 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது.
தொடர்ந்து நேற்று காலை 6 மணி முதல் 10 மணி வரை 48.6 மில்லி மீட்டர் அளவு மழை பெய்தது. பலத்த மழையின் காரணமாக ஜவ்வாதுமலையில் உற்பத்தியாகும் மஞ்சளாற்றில் கரை புரண்டு வெள்ளம் ஓடியது.
வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது
இந்த வெள்ளப்பெருக்கினால் அத்திமூர் பாலத்தில் நீர் தேங்கி அத்திமூர் கிராமத்திற்குள் தண்ணீர் புகுந்தது. வீடுகள் மற்றும் திரவுபதி அம்மன் கோவிலுக்குள் நீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிக்குள்ளானார்கள்.
பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் பாலத்தின் அடைப்பை சரி செய்தனர். இதையடுத்து வீடுகளில் தேங்கியுள்ள நீர் வெளியேறியது. மஞ்சளாற்றில் வெள்ளப்பெருக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு இப்போது தான் வந்துள்ளது என்று விவசாயிகள் கூறினர். மேலும் அவர்கள் கூறுகையில், இதன் பயனாக போளூர், அத்திமூர், பெரியகரம், மாம்பட்டு ஆகிய 4 ஊர் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்து உள்ளது என்றனர்.
நெல் மூட்டைகள் நாசம்
மேலும் சூறாவளி காற்றுடன் கூடிய மழை பெய்தததால் போளூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கள்ளக்குறிச்சி, திமிரி, களம்பூர், ஆரணி ஆகிய ஊர்களில் இருந்து வந்த வியாபாரிகள் 3 ஆயிரம் நெல் மூட்டைகளை கொள்முதல் செய்திருந்தனர். அவர்கள் அதனை எடுத்து செல்வதற்குள் மழை வந்ததால் அனைத்தும் நனைந்து நாசமானது. இதையடுத்து வருகிற 3-ந் தேதிக்கு பிறகு விவசாயிகள் நெல் விற்பனைக்கு கொண்டு வருமாறு அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
கீழ்பென்னாத்தூர்
கீழ்பென்னாத்தூரில் நேற்று காலை 8 மணி அளவில் கருமேகங்கள் திரண்டு மாலை நேரம் போன்று இருள் சூழ்ந்தது போன்று காணப்பட்டது. இதனையடுத்து பலத்த மழை பெய்ய தொடங்கியது. 40 நிமிடங்களுக்கு மழை மேல் நீடித்தது.
இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் வெள்ளம் போன்று பெருக்கெடுத்து ஓடியது. மேலும் குளிர்ந்த காற்று வீசியதால் வெயில் தாக்கம் குறைந்தது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக வீட்டிலே அடங்கி கிடக்கும் பொதுமக்களும் விவசாயிகளுக்கும் இந்த மழை கொஞ்சம் ஆறுதலை தந்தது. இதேபோன்று கீழ்பென்னாத்தூரை சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவலாக மழை பெய்தது.
சேத்துப்பட்டு
சேத்துப்பட்டு, பெரணமல்லூர், தேசூர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் நேற்று காலை 8 மணியளவில் பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார் 1 மணி நேரத்திற்கு மேல் நீடித்தது. இந்த மழையினால் மக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ஆரணி
ஆரணியில் கடந்தசில நாட்களாக 100 டிகிரிக்குமேல் வெயில் சுட்டெரித்தது. இதனால் வெப்பம் கடுமையாக இருந்தது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விட்டு விட்டு பலத்த சூறைக்காற்று வீசியது. அதைத்தொடர்ந்து இடி, மின்னலுடன் ஒரு மணிநேரம் மழை பெய்தது. இதனால் நகரில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சியளித்தது. ஆரணியில் நேற்று 8.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. ஆரணியில் நேற்று காலை 10 மணிவரை பெரும்பாலான பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது.