ஊரடங்கால் தனியார் பஸ் ஊழியர்கள் 2 ஆயிரம் பேர் வருமானம் இன்றி தவிப்பு
ஊரடங்கால் பஸ்கள் ஓட தடை விதிக்கப்பட்டுள்ளதால் புதுவையில் தனியார் பஸ் ஊழியர்கள் சுமார் 2 ஆயிரம் பேர் வருமானம் இன்றி தவிக்கின்றனர்.
பாகூர்,
புதுவையில் அரசு பஸ்களை காட்டிலும் தனியார் பஸ்களின் சேவை அதிகம் ஆகும். புதுவையில் இருந்து கடலூர், விழுப்புரம், திண்டிவனம் ஆகிய ஊர்களுக்கும், நகர பகுதியிலும் சுமார் 500 தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது. இதில் டிரைவர், கண்டக்டர், டிக்கெட் பரிசோதகர், கிளனர், மெக்கானிக் என 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஒரு நாள் ஊதியமாக டிக்கெட் கட்டண வசூலுக்கு ஏற்றவாறு 700 முதல் 900 ரூபாய் வரை வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப் படுத்துவதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் மக்கள் வீடுகளுக்குள்ளே முடங்கி இருக்கின்றனர். நிறுவனங்கள், தொழிற்சாலைகள் இயங்காததால் ஏராளமானவர்கள் வருமானத்தை இழந்துள்ளனர். டிரைவர்கள், கூலித்தொழிலாளர்கள் என பலரும் வேலை இல்லாததால் வருமானம் இன்றி குடும்பத்தை நடத்த கஷ்டப்படுகின்றனர்.
மாற்று வேலை
புதுவையில் இவ்வாறு பாதிக்கப்பட்ட பலரும் தற்போது மாற்று வேலைக்கு செல்கின்றனர். காய்கறி, பழங்கள், வீட்டில் தயாரிக்கப்படும் தின்பண்டங்கள் போன்றவற்றை இருசக்கர வாகனங்களில் காலை நேரத்தில் தெரு தெருவாக சென்று விற்பனை செய்கின்றனர். மேலும் மார்க்கெட், கடை வீதிகளிலும் வியாபாரம் செய்கின்றனர். இதன் மூலம் கிடைக்கும் கணிசமான வருவாயை வைத்தே வாழ்க்கையை நகர்த்துகின்றனர்.
பெரும்பாலான தனியார் பஸ் தொழிலாளர்களுக்கு வேறு வேலை தெரியாததால், வருமானம் இன்றி தவிக்கின்றனர். அவர்களுக்கு, பஸ் உரிமையாளர்கள் அரிசி, காய்கறி மற்றும் மளிகை பொருட்களை வழங்கி உதவி வருகின்றனர்.
நிவாரண நிதி வழங்கவேண்டும்
இது குறித்து தனியார் பஸ் தொழிலாளர்கள் கூறுகையில், ஊரடங்கு காரணமாக பொது போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டு உள்ளது. இதனால் கடந்த ஒரு மாத காலமாக நாங்கள் வேலை இல்லாமல் சிரமப்படுகின்றோம். புதுவை அரசு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரண நிதி வழங்கியதுபோல், எங்களுக்கும் நிதி உதவி வழங்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.