வானூர், மரக்காணம், கண்டமங்கலம் பகுதிகளில் முழு ஊரடங்கால் வெறிச்சோடிய சாலைகள்
வானூர், மரக்காணம், கண்டமங்கலம் பகுதிகளில் முழு ஊரடங்கால் சாலைகள் வெறிச்சோடி கிடந்தன.
வானூர்,
கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த காலகட்டத்தில் சில கட்டுப்பாடுகளுடன் கடைகள் திறந்திருக்க அனுமதிக்கப்பட்டு இருந்தது. இருப்பினும் வைரஸ் தொற்று பரவுவது குறையவில்லை. இதனை கட்டுப்படுத்தும் வகையில் 100 சதவீத சமூகவிலகலை கடைபிடிக்கும் வகையில் விழுப்புரம் மாவட்டம் முழுவதும் நேற்று ஒருநாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு உத்தரவால் வானூர், மரக்காணம், கோட்டக்குப்பம், கிளியனூர் பகுதியில் மருந்து கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. வாகனங்கள் இயங்க தடை விதிக்கப்பட்டு இருந்ததால் புதுச்சேரி, திண்டிவனம், கிழக்கு கடற்கரை சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காட்சியளித்தன. தடையை மீறி வந்த ஒரு சில வாகனங்களையும் போலீசார் எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர். உரிய அனுமதி கடிதம் வைத்திருந்த வாகனங்கள் மட்டும் புதுவை பகுதிக்கு செல்ல அனுமதிக்கப்பட்டன.
பால் வியாபாரிகள் வாக்குவாதம்
புதுவையை அடுத்த பட்டானூர் சோதனை சாவடியில் கோட்டக்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுகன்யா தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது புதுவை பகுதிக்கு செல்வதற்காக இருசக்கர வாகனங்களில் பால் வியாபாரிகள் சிலர் வந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி, திரும்பிச்செல்லுமாறு கூறினர். ஆனால் அவர்கள் மறுத்தனர். இதனால் லேசான வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.
திருச்சிற்றம்பலம் கூட்டுரோட்டில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பால் வியாபாரி ஒருவர் இருசக்கர வாகனத்தில் பால் கேனுடன் வந்தார். அவரை தடுத்து நிறுத்திய போலீசார், திரும்பி செல்லுமாறு அறிவுறுத்தினர். ஆனால் அவர் முன்னேறி செல்ல முயன்றார். எனவே அவரை போலீசார் வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பி, எச்சரிக்கை செய்தனர்.
கண்டமங்கலம்
கண்டமங்கலம், பாக்கம் கூட்டுரோடு, வழுதாவூர், பக்கிரிபாளையம், சித்தலம்பட்டு உள்பட அனைத்து பகுதிகளிலும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டு இருந்தன. இதனை கண்காணிக்கும் விதமாக கண்டமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெய்சங்கர், சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். தடையை மீறி வாகனங்களில் வந்தவர்களை எச்சரிக்கை செய்து திருப்பி அனுப்பினர்.
முழு ஊரடங்கு காரணமாக கிராமப்புறங்களிலும் மக்கள் நடமாட்டமின்றி, தெருக்கள் வெறிச்சோடி கிடந்தன.