ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பகலில் வெயில் அடித்து வந்தது. சமீபத்தில் மழை பெய்தாலும் அதிகமாக பெய்யாமல், குறைவாக பெய்தது. இந்த நிலையில் நேற்று காலையில் இருந்தே ஊட்டி நகரில் வானம் மேகமூட்டத்துடன் மப்பும், மந்தாரமுமாக காணப்பட்டது. சிறிது நேரம் வெயில் அடிப்பதும், மேகங்கள் கூடுவதுமாக இருந்தது. 11.30 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை தொடர்ந்து 1 மணி நேரம் விடாமல் பலத்த மழையாக பெய்தது.
இதனால் ஊட்டி ஏ.டி.சி. பகுதியில் திறந்தவெளி சந்தைகளுக்கு காய்கறிகள், பழங்கள், மளிகை பொருட்கள் வாங்க வந்த பொதுமக்கள் மழையில் நனையாமல் இருக்க பஸ் நிறுத்தங்களில் ஒதுங்கி நின்றனர். திறந்தவெளியில் கடைகள் அமைக்கப்பட்டு இருந்தால், மேற்பகுதியில் போடப்பட்ட தார்பாய்களில் தண்ணீர் தேங்கி, கடைகளுக்குள் ஒழுகியது. இதனால் வியாபாரிகள் மளிகை பொருட்கள், காய்கறிகளை சாக்குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கூடைகளில் எடுத்து வைத்தனர்.
காட்டுத்தீ அபாயம் குறைந்தது
சிலர் கடை முழுவதையும் தார்பாயால் மூடினர். பொதுமக்கள் மழையில் நனையாமல் இருக்க குடைபிடித்தபடி நடந்து செல்வதை காண முடிந்தது. ஒரு மணி நேரம் பெய்த பலத்த மழையால், சந்தைகளில் மக்கள் கூட்டம் கலைந்தது. மேலும் கடைகளில் பொருட்கள் நனைந்ததால் வியாபாரிகள் உடனடியாக அகற்றி சரக்கு வாகனங்கள், ஆட்டோக்களில் ஏற்றி சென்றனர். வழக்கமாக அத்தியாவசிய கடைகள் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை இருக்கும்.
ஆனால், நேற்று கடைகளுக்கு முன்பு தண்ணீர் தேங்கியதாலும், பொருட்கள் நனைந்ததாலும் மதியம் 12 மணியளவில் சில கடைகள் மூடப்பட்டன. ஊட்டியில் கமர்சியல் சாலை, பஸ் நிலையம், சேரிங்கிராஸ், எட்டின்ஸ் சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. கோடப்பமந்து, பிங்கர்போஸ்ட், நொண்டிமேடு, பெர்ன்ஹில் மற்றும் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்தது. மேலும் கூடலூர், மசினகுடியிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் ஊட்டியை சுற்றி உள்ள வனப்பகுதிகளில் காட்டுத்தீ ஏற்படும் அபாயம் குறைந்து இருக்கிறது.