போலீஸ் கெடுபிடி காரணமாக கோவையில் மருந்து கடைகள் அடைப்பு
போலீசாரின் கெடுபிடி காரணமாக கோவையில் பெரும்பாலான மருந்து கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.
கோவை,
கொரோனா பரவலை தடுக்க கோவை, சென்னை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் 4 நாட்கள் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த உத்தரவு நேற்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது. வருகிற 29-ந் தேதி இரவு 9 மணி வரை நடைமுறையில் இருக்கும். ஊரடங்கின்போது திறந்திருந்த மளிகை, காய்கறி கடைகள் முழு ஊரடங்கின்போது திறந்திருக்காது என்று அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் பொருட்கள் வாங்குவதற்காக வந்தோம் என்று சாக்குபோக்கு கூறி வெளியே வரமுடியாது. இதனால் கோவையில் நேற்று ஊடங்கு தீவிரமாக கடைபிடிக்கப்பட்டது.
முழு ஊரடங்கில் இருந்து மருந்து கடைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தாலும், கோவையில் ஏராளமான மருந்து கடைகள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. இதனால் அவசரத்துக்கு மருந்துகள் கிடைக்காமல் பலர் அவதிக்குள்ளானார்கள்.
கேள்வி மேல் கேள்வி
இதுகுறித்து சில மருந்து கடைக்காரர்கள் கூறியதாவது:-
ஊரடங்கின்போது கோவையில் உள்ள அனைத்து மருந்து கடைகளும் திறந்திருந்தன. அப்போதே கடையை திறக்க போகும் போது அவர்களை சில இடங்களில் போலீசார் நிறுத்தி எங்கே செல்கிறீர்கள்? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு காக்க வைப்பார்கள்.
குடோனில் போய் மருந்து எடுக்க வேன்களில் சென்றால் அதற்கு போலீசார் அனுமதிப்பதில்லை. சில மருந்து கடைகளில் பிஸ்கட் விற்கிறார்கள். அதை ஏன் விற்கிறீர்கள் என்று போலீசார் கேட்டு கெடுபிடி செய்தனர். இவற்றையெல்லாம் நாங்கள் தாங்கிக் கொண்டு ஊரடங்கின்போது கடைகளை திறந்து வைத்தோம்.
பாஸ் அளிக்கவில்லை
ஆனால் முழு ஊரடங்கின்போது மருந்து கடைகளை திறக்க பாஸ் வேண்டும் என்று போலீஸ் தரப்பில் கூறியதாக தெரிகிறது. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தை தொடர்பு கொண்டபோது மருந்து கடைகளை திறப்பதற்காக தனியாக பாஸ் வழங்க முடியாது. மருந்து கடைகளின் பதிவு சான்றிதழ் மற்றும் ஜி.எஸ்.டி. பதிவு சான்றிதழ் ஆகியவற்றை போலீசாரிடம் காண்பித்து கடைகளை திறக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
மருந்து கடைகளின் பதிவு சான்றிதழை பிரேம் செய்து கடைகளில் வைக்கப்பட்டுள்ளது. அவற்றின் ஜெராக்சை காண்பித்தால் போலீசார் அனுமதிக்க மாட்டார்கள் என்று கூறப்பட்டது. அசல் சான்றிதழை கொண்டு செல்வது என்பது நடைமுறைக்கு ஒத்து வராது. எனவே முழு ஊரடங்கின்போது எங்களுக்கு பாஸ் அளியுங்கள் என்று கேட்டதற்கு அதற்கு வாய்ப்பில்லை என்று கூறிவிட்டனர்.
போலீசார் கெடுபிடி
மருந்து கடையின் அடையாள அட்டை போன்றவற்றை காண்பித்தால் அதை ஏற்றுக் கொள்ளாமல் கலெக்டரிடம் பாஸ் வாங்கி வாருங்கள், பதிவு சான்றிதழ் காண்பிக்க வேண்டும் என்று சில இடங்களில் போலீசார் கெடுபிடி செய்வதால் பெரும்பாலான மருந்து கடைகள் நேற்று அடைக்கப்பட்டன.
எனவே போலீசார் கெடுபிடி செய்யாமல் இருந்தால் நாங்கள் கடைகளை திறக்க தயாராக இருக்கிறோம். எங்கள் அடையாள அட்டைகளை காண்பித்தால் போலீசார் அனுமதிக்க வேண்டும். அதற்கு ஏற்பாடு செய்தால் கடைகளை திறப்போம். இல்லையென்றால் கடைகள் தொடர்ந்து அடைக்கப்பட்டிருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.