புதிதாக 34 பேருக்கு நோய் தொற்று; தாராவியில் 275 பேர் கொரோனாவால் பாதிப்பு
புதிதாக 34 பேருக்கு நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டதன் மூலம் தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 275 ஆகி உள்ளது.
மும்பை,
மும்பையின் இதய பகுதியில் அமைந்து உள்ள தாராவியில் கொரோனா வைரஸ் அசுர வேகத்தில் பரவி வருகிறது. தாராவியில் கொரோனா பரவலை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இங்கு தனிமைப்படுத்தப்படும் மையங்களின் படுக்கை எண்ணிக்கை 1000-த்தில் இருந்து 2 ஆயிரத்து 300 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் பொது கழிவறைகள் மற்றும் குடிசைப்பகுதிகள் கிருமிநாசினியால் சுத்தம் செய்யும் பணிநடந்து வருகிறது. இந்தநிலையில் தாராவியில் நேற்று புதிதாக 34 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறிப்பட்டது. இவர்களில் 15 போ் பெண்கள், 19 போ் ஆண்கள்.
எந்தெந்த பகுதிகள்...
இந்த 34 பேரும் தாராவி பென்சன் சால், சோசியல் நகர், குஞ்ச்குருவேநகர், முகுந்த்நகர், இந்திராநகர், நியுமுனிசிபல் சால், மாட்டுங்கா லேபர்கேம்ப், விஜய்நகர், ராஜூவ்காந்தி சால், விஜய் நகர், கிராஸ்ரோடு ஆகாஷ்வாடி, ஜனதா சொசைட்டி, ராஜூவ்காந்தி நகர், அஸ்ரா எஸ்டேட், பி.எம்.ஜி.பி. காலனி, உதய் சொசைட்டி, சதாப்தி நகர், சிந்தி சவுக், லாத்தர் கல்லி(தாராவி போலீஸ் நிலையம் அருகில்), கும்பர்வாடா, சிவ்சக்தி நகர், முஸ்லிம்நகர், சாகுநகர், அஜ்னேரா தெரு, டோர்வாடா, கமலாநேரு நகர், பால்கர் சால், மங்கல்வாடி, ஏ.கே.ஜி. நகர், கிரில் பேலஸ் சொசைட்டி பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
இதன் மூலம் தாராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 275 ஆகி உள்ளது. மேலும் இவர்களில் இதுவரை 14 பேர் பலியாகி உள்ளனர்.