விவசாயிகள் சங்கம் சார்பில், வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்
தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடந்தது.
கோபால்பட்டி,
சாணார்பட்டி ஒன்றிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் மலைக்கேணி, மருநூத்து, ஆவிளிபட்டி, களத்துப்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் உள்ள வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம் நடந்தது. இதற்கு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள் தலைமை தாங்கினார். இதில் நிர்வாகிகள் மூக்கராஜ், பெரியசாமி, ராஜா உள்பட பலர் கலந்துகொண்டனர். போராட்டத்தின்போது, தமிழ்நாடு அரசு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு கோரிய நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவின்படி சிறு, குறு விவசாயிகளுக்கு ரூ.10 ஆயிரம் உதவித்தொகை வழங்கவேண்டும், 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களை விவசாய பணிகளுக்கு அனுமதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தினர்.