கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேலூர் பத்திரப்பதிவு அலுவலகம் மூடல்

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வேலூர் பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூடப்பட்டன.

Update: 2020-04-25 22:15 GMT
வேலூர், 

தமிழகத்தில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்கள் 33 சதவீத ஊழியர்களுடன் 20-ந் தேதி முதல் இயங்கலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி வேலூர் மண்டலத்தில் உள்ள வேலூர், அரக்கோணம், திருவண்ணாமலை, செய்யாறு ஆகிய பத்திரப்பதிவு மாவட்டங்களில் 44 பத்திரப்பதிவு அலுவலகங்கள் இயங்கி வந்தன.

கொரோனா தொற்று பாதித்தவர்கள் வசித்த பகுதிகளில் உள்ள பத்திரப்பதிவு அலுவலகங்களை முன்எச்சரிக்கை நடவடிக்கையாக மூடும்படி வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதன்பேரில் வேலூர், பள்ளிகொண்டா பத்திரப்பதிவு அலுவலகங்கள் மூடப்பட்டன. கலெக்டரின் மறுஉத்தரவு வரும்வரை இந்த அலுவலகங்கள் மூடப்பட்டிருக்கும். வேலூர் மண்டலத்தில் உள்ள மற்ற அலுவலகங்கள் வழக்கம்போல் செயல்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்