ஊரடங்கில் தளர்வு: பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் திறப்பு - லாரிகள் போக்குவரத்தும் தொடங்கியது

தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால், பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையம் நேற்று செயல்பட தொடங்கியது. துறைமுகம் இயங்கி வருவதால் லாரிகள் போக்குவரத்தும் தொடங்கியது.

Update: 2020-04-25 22:15 GMT
தூத்துக்குடி, 

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் தமிழக அரசு ஊரடங்கில் இருந்து சில தொழில்கள், சேவைகளுக்கு தளர்வு அளித்து உள்ளது. 

அதன்படி பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர் சேவை மையங்கள் நேற்று செயல்பட தொடங்கின. சேவை மையத்தில் உள்ள சிறிய கவுண்ட்டர் மூலம் வாடிக்கையாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன.

பேக்கரி கடைகள்

இதே போன்று பிரட் தயாரிப்பு நிறுவனங்களுக்கு அரசு விலக்கு அளித்து உள்ளது.

ஏற்கனவே பேக்கரிகள் திறந்து இருந்த நிலையில், தற்போது அதிக அளவில் ரொட்டிகள் உற்பத்தி செய்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

மேலும் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் இயங்கி வருவதால், தற்போது லாரிகள் போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது. இதே போன்று அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் லாரிகளும் அதிக அளவில் நேற்று சென்றன. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்டம் முழுவதும் தொடர்ந்து கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்