ஆண்டிமடத்தில் 9 கடைகளுக்கு அதிகாரிகள் ‘சீல்’
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் கடைவீதி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது.
ஆண்டிமடம்,
அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் கடைவீதி பகுதியில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் தடையை மீறி 6 பேக்கரி, 1 ஸ்வீட் ஸ்டால், 1 டீக்கடை, விளந்தையில் நடைபெறும் ஒரு தனியார் நிறுவனம் உள்பட 9 கடைகளுக்கும் ஆண்டிமடம் தாசில்தார் தேன்மொழி பூட்டி ‘சீல்’ வைத்தார். அப்போது துணை தாசில்தார் காமராஜ், கிராம நிர்வாக அதிகாரி இலக்கியா, ஆண்டிமடம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மதன்குமார் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.