பசுபதிபாளையத்தில் சாலையில் கொட்டி குப்பைகளை தரம் பிரிக்கும் தூய்மை பணியாளர்கள் பொதுமக்கள் அச்சம்

பசுபதிபாளையத்தில் சாலையில் குப்பைகளை தூய்மைபணியாளர்கள் தரம்பிரிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2020-04-25 04:31 GMT
கரூர், 

பசுபதிபாளையத்தில் சாலையில் குப்பைகளை தூய்மைபணியாளர்கள் தரம்பிரிப்பதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

தூய்மைபணியாளர்கள்

கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால், வீடுகளுக்குள் மக்கள் முடங்கி கிடக்கின்றனர். மருத்துவ ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள், காவல் துறையினர் உள்பட ஒரு சில துறைகள் மட்டும் செயல்பட்டு வருகின்றன. மருத்துவ ஊழியர்கள் மற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முக கவசம், கையுறை போன்ற பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

கரூர் நகராட்சியில் 48 வார்டுகளாக பிரிக்கப்பட்டு, தூய்மைபணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பைகளை சேகரிக்கின்றனர். பின்னர் அவற்றை தரம் பிரித்து மக்கும், மக்காத குப்பைகளாக தரம் பிரிக்கின்றனர். பின்னர் மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மறு சுழற்சிக்கு பயன்படுத்தும் வகையில் அனுப்புகின்றனர்.

கோரிக்கை

இந்நிலையில், பசுபதிபாளையம் பகுதியில் உள்ள வீடுகள், கடைகள் மூலம் குப்பைகள் தினமும் சேமிக்கப்பட்டது. மேலும் பசுபதிபாளையம் ராஜா நகர் பகுதியில் கொரோனாவில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் உள்ள வீடுகளிலும் சேமிக்கப்பட்ட குப்பைகளும், கரூர் தொழிற்பேட்டை சாலைக்கு கொண்டு வரப்பட்டு, சாலையில் வைத்து தூய்மைபணியாளர்கள் தரம்பிரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் கொரோனா தொற்று பரவி விடுமோ? என அப்பகுதி பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். இதனால் குப்பைகளை சாலைகளில் தரம்பிரிக்காமல், பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு சென்று தரம்பிரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்