சுரண்டையில் கொரோனாவை தடுக்க தெருக்களை அடைத்த பொதுமக்கள்

கொரோனாவை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Update: 2020-04-25 02:58 GMT
சுரண்டை, 

கொரோனாவை தடுக்க அரசு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து உள்ளது. மேலும் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் வகையில், காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. இருப்பினும், ஊரடங்கு உத்தரவை மீறி பலர் வெளியே சுற்றித்திரிகின்றனர். இதை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்ட போதிலும், அதை முழுமையாக தடுக்க முடியவில்லை.

இந்த நிலையில் சுரண்டை வரகுணராமபுரம் பகுதியில் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் தவிர தேவை இல்லாமல் வெளியே செல்வதை தவிர்க்கவும், வெளிநபர்கள் உள்ளே வருவதை தடுக்கவும் ஊருக்குள் வரும் 6 வழிகளையும் அடைக்க ஊர் பெரியவர்களே முடிவு செய்து கம்புகளால் அடைத்து உள்ளனர். மேலும் அதில் வேப்பிலையும் கட்டி தொங்க விட்டு உள்ளனர். இதுதவிர அந்த பகுதிகளில், கைகளை கழுவ தண்ணீர் மற்றும் சோப்பு வைத்து இளைஞர்கள் கண்காணித்து வருகின்றனர். பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்வது கவனத்தை ஈர்த்துள்ளது.

மேலும் செய்திகள்