பாவூர்சத்திரத்தில் 6 தெருக்கள் மூடல்
பாவூர்சத்திரத்தில் 6 தெருக்கள் மூடப்பட்டது.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரத்தில் 6 தெருக்கள் மூடப்பட்டது.
தெருக்கள் மூடப்பட்டது
பாவூர்சத்திரத்தில் பஸ்நிலையம் அருகில் பாவூர்சத்திரம்- தென்காசி, பாவூர்சத்திரம்- நெல்லை, பாவூர்சத்திரம்- கடையம், பாவூர்சத்திரம்- சுரண்டை ஆகிய பகுதிகளுக்கு செல்லும் சந்திப்பு உள்ளது. இதில் கடையம் சாலையில் இருந்து வரும் வாகன ஓட்டிகள், பஸ்நிலையம் அருகே போலீசார் சோதனையில் இருப்பதை கண்டவுடன் அந்த பகுதியில் உள்ள சுமார் 6 தெருக்கள் வழியாக உள்ளே புகுந்து சென்று விடுகிறார்கள்.
இதனை கண்காணிக்கும் விதமாக நேற்று முதல் பாவூர்சத்திரம் போலீசார் பாவூர்சத்திரம்- கடையம் சாலையில் உள்ள 6 தெருக்களையும் மூடினர். இதனால் கடையம் சாலையில் இருந்து வருபவர்கள் பஸ்நிலையம் அருகில் போலீசார் வாகன சோதனை இடத்திற்கு வந்தால் மட்டுமே செல்ல முடியும் என்ற நிலை உள்ளது.
சோதனை தீவிரம்
நேற்று முதல் வாகன சோதனை மிகவும் தீவிரப்படுத்தப்பட்டது. அத்துடன் அனைவரும் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே அத்தியாவசிய பணிகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர். இதேபோல் பாவூர்சத்திரம் பஸ்நிலையத்தின் நுழைவுவாயில் முற்றிலும் அடைக்கப்பட்டது.